செய்திகள்
சுப்ரீம் கோர்ட்

சுப்ரீம் கோர்ட்டில் முதன்முறையாக வழக்கின் தீர்ப்பு தமிழில் வெளியானது -யாருடைய வழக்கு?

Published On 2019-07-18 08:07 GMT   |   Update On 2019-07-18 08:07 GMT
சுப்ரீம் கோர்ட்டின் முக்கியமான தீர்ப்புகள் மாநில மொழிகளில் வெளியிடப்படும் என கூறப்பட்டிருந்தது. அதன்படி தமிழ் மொழியில் இன்று தீர்ப்பு வழங்கப்பட்டுள்ளது. இது யாருடைய வழக்கு என்பதையும் பார்ப்போம்.
சுப்ரீம் கோர்ட்டின் முக்கியமான தீர்ப்புகள் அசாமீஸ், கன்னடம், தெலுங்கு உள்ளிட்ட மாநில மொழிகளிலும் வெளியிடப்படும் என சுப்ரீம் கோர்ட்டு சமீபத்தில் அறிவித்தது. இதற்கு நாடு முழுவதும் மிகப்பெரும் ஆதரவு காணப்பட்டது.

அதேநேரம் சுப்ரீம் கோர்ட்டின் இந்த நடவடிக்கையை வரவேற்ற தி.மு.க. உள்ளிட்ட தமிழக அரசியல் கட்சிகள், தீர்ப்புகளை தமிழிலும் மொழி பெயர்த்து வெளியிட வேண்டும் என கோரிக்கை விடுத்தன.

இந்தநிலையில் சுப்ரீம் கோர்ட்டில் கட்டப்பட்டு உள்ள கூடுதல் கட்டிடம் ஒன்றை ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் நேற்று திறந்து வைத்தார். அப்போது கன்னடம், அசாமீஸ் உள்ளிட்ட 9 மாநில மொழிகளில் மொழி பெயர்க்கப்பட்ட சுப்ரீம் கோர்ட்டின் முக்கியமான 100 தீர்ப்புகளை நீதிபதி பாப்டே அவரிடம் வழங்கினார்.



பின்னர் இந்த நிகழ்ச்சியில் பேசிய தலைமை நீதிபதி ரஞ்சன் கோகாய், அரசியல் சாசனத்துக்கு கடந்த காலங்களில் ஏற்பட்ட பல்வேறு நெருக்கடிகள் மற்றும் அச்சுறுத்தலை சுப்ரீம் கோர்ட்டு தடுத்து நிறுத்தியதாக தெரிவித்தார்.

மத்திய சட்ட மந்திரி ரவிசங்கர் பிரசாத் மற்றும் சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் உள்பட பலர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
நேற்று வெளியிடப்பட்ட சுப்ரீம் கோர்ட் தீர்ப்பின் மொழி பெயர்ப்புகளில் தமிழ் இடம் பெறவில்லை. இது தமிழர்கள் மத்தியில் பெரும் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருந்தது.

இந்நிலையில் இன்று காலை காலமான சரவண பவன் அதிபர் ராஜகோபால் மீதான கொலை வழக்கில் சுப்ரீம் கோர்ட் வெளியிட்ட தீர்ப்பு, முதன்முறையாக தமிழில் வெளியிடப்பட்டுள்ளது.
Tags:    

Similar News