செய்திகள்
பிரணவ் சிங் சாம்பியன்

சினிமா பாணியில் துப்பாக்கிகளுடன் நடனம் ஆடிய எம்எல்ஏ பாஜகவில் இருந்து சஸ்பெண்ட்

Published On 2019-07-17 10:52 GMT   |   Update On 2019-07-17 10:52 GMT
உத்தரகாண்ட் மாநிலத்தில் பாஜக எம்எல்ஏ, அறை ஒன்றில் துப்பாக்கிகளை ஏந்திய படி சினிமா பாணியில் நடனமாடியதைத் தொடர்ந்து அவரை கட்சி தலைமை 6 ஆண்டுகளுக்கு சஸ்பெண்ட் செய்துள்ளது.
டேராடூன்:

உத்தரகாண்ட் மாநிலத்தைச் சேர்ந்தவர் பிரணவ் சிங் சாம்பியன். இவர் பாஜகவைச் சேர்ந்த எம்எல்ஏ ஆவார். பல்வேறு சர்ச்சைகளுக்குப் பெயர்போன இவர், தற்போது மீண்டும் ஒரு சர்ச்சையில் சிக்கியுள்ளார். 
 
பிரணவ் தனது இரு கைகளிலும் துப்பாக்கிகளை வைத்துக் கொண்டு நண்பர்களுடன் குடித்து விட்டு  ‘கேங்ஸ் ஆப் வஸிப்பர்’ படத்தில் வருவதைப்போல ஆடியுள்ளார். 

ஒரு கட்டத்துக்கு மேல் வாயில் துப்பாக்கியினை வைத்துக் கொண்டு பயங்கர ஆட்டம் போட்டுள்ளார். மேலும் தகாத வார்த்தைகளால் நண்பர்களை திட்டியும் உள்ளார். 



இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலானது. இதற்கு பல்வேறு அரசியல் கட்சி தலைவர்களும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து பிரணவை கட்சியில் இருந்து நீக்குமாறு உத்தரகாண்ட் மாநிலத்தின் கட்சித் தலைவர்கள் பரிந்துரைத்தனர். 

இதையடுத்து பிரணவ் மீது ஒழுங்கு நடவடிக்கை காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளதாக கட்சி தலைமை அறிவித்தது. 

இந்நிலையில், துப்பாக்கிகளை ஏந்திய படி சினிமா பாணியில் நடனமாடிய பாஜக எம்எல்ஏ பிரணவ் சிங் சாம்பியனை அக்கட்சி தலைமை 6 ஆண்டுக்கு சஸ்பெண்ட் செய்து இன்று உத்தரவிட்டுள்ளது.
Tags:    

Similar News