செய்திகள்
நீதிமன்ற தீர்ப்பு

7 வயது சிறுமியை பலாத்காரம் செய்து கொலை- கேரள வாலிபருக்கு மறக்க முடியாத தண்டனை

Published On 2019-07-17 10:38 GMT   |   Update On 2019-07-17 10:38 GMT
கேரளாவில் சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்து கொன்ற வாலிபருக்கு அதிகபட்ச தண்டனையை நீதிமன்றம் வழங்கியிருக்கிறது.
கொல்லம்:

கேரள மாநிலம் கொல்லம் மாவட்டம் அஞ்சால் பகுதியைச் சேர்ந்த 25 வயது வாலிபர் ஒருவர், கடந்த 2017ம் ஆண்டு தன் உறவினரின் 7 வயது மகளை ஏமாற்றி, சுமார் 16 கிமீ தொலைவில் உள்ள குளத்துப்புழா காட்டுக்கு அழைத்துச் சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். பின்னர் அந்த சிறுமியை கொடூரமான முறையில் கொலை செய்து, உடலை அங்கேயே போட்டுவிட்டு சென்றுள்ளார். 

இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து, காட்டுக்குள் பதுங்கியிருந்த குற்றவாளியை கைது செய்து, அவர் மீது போக்சோ சட்டத்தின்கீழ் பல்வேறு பிரிவுகளில் வழக்கு பதிவு செய்தனர். கொல்லத்தில் உள்ள போக்சோ நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.



இவ்வழக்கின் விசாரணை முடிவடைந்த நிலையில் இன்று நீதிபதி தீர்ப்பு வழங்கினார். அப்போது, குற்றம்சாட்டப்பட்ட வாலிபர் மீதான குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்பட்டதால் அவருக்கு மறக்க முடியாத அளவில் அதிகபட்ச தண்டனை விதித்தார். 3 ஆயுள் தண்டனை மற்றும் 26 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனை விதிக்கப்பட்டது. இந்த தண்டனைக் காலத்தை தனித்தனியாக அனுபவிக்க வேண்டும் என்றும் நீதிபதி உத்தரவிட்டார். 

இதுதவிர ரூ.3.20 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. இந்த தொகையை பாதிக்கப்பட்ட சிறுமியின் குடும்பத்திற்கு வழங்க வேண்டும் என உத்தரவிட்டார்.
Tags:    

Similar News