செய்திகள்
நீரஜ் சேகர்

மாநிலங்களவை எம்.பி. நீரஜ் சேகரின் ராஜினாமா ஏற்பு

Published On 2019-07-16 08:06 GMT   |   Update On 2019-07-16 08:06 GMT
உத்தர பிரதேசத்தில் இருந்து மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்ட நீரஜ் சேகரின் ராஜினாமாவை அவைத்தலைவர் ஏற்றுக்கொண்டார்.
புதுடெல்லி:

உத்தர பிரதேசத்தில் இருந்து சமாஜ்வாடி கட்சி சார்பில் மாநிலங்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர் நீரஜ் சேகர். இவர், முன்னாள் பிரதமர் சந்திர சேகரின் மகன் ஆவார். 

இந்நிலையில் நீரஜ் சேகர் நேற்று மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடுவை சந்தித்தார். அப்போது, மாநிலங்களவை உறுப்பினர் பதவியில் இருந்து ராஜினாமா செய்வதாக கூறி, ராஜினாமா கடிதம் அளித்தார். அவரது ராஜினாமாவை அவைத்தலைவரும் ஏற்றுக்கொண்டுள்ளார். மாநிலங்களவை இன்று கூடியபோது இந்த தகவலை அவைத்தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்தார். 

நீரஜ் சேகர் ராஜினாமா கடிதம் கொடுத்தபோது, யாருடைய நிர்ப்பந்தத்தின்பேரில் ராஜினாமா செய்யவில்லை என்றும், தானாக முன்வந்து ராஜினாமா செய்ததாகவும் கூறியுள்ளார். 

சமாஜ்வாடி கட்சியின் முக்கிய தலைவராக விளங்கிய நீரஜ் சேகர், அக்கட்சியில் இருந்து விலகி பாஜகவில் சேரப்போவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 
Tags:    

Similar News