செய்திகள்
தேசிய புலனாய்வு முகமை

தேசிய புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் - பாராளுமன்றத்தில் மசோதா நிறைவேற்றம்

Published On 2019-07-15 11:59 GMT   |   Update On 2019-07-15 11:59 GMT
தேசிய புலனாய்வு முகமைக்கு அதிக அதிகாரம் அளிக்க வகை அளிக்கும் சட்டத்திருத்த மசோதா பாராளுமன்ற மக்களவையில் இன்று ஓட்டெடுப்பு மூலம் நிறைவேறியது.
புதுடெல்லி:

நாட்டில் நடைபெறும் பயங்கரவாத தாக்குதல் தொடர்பான விசாரணை மற்றும் தாக்குதலுக்கு திட்டமிடும் பயங்கரவாதிகளை பற்றிய உளவுத்தகவல்களை கண்காணித்து அவர்களை கைது செய்வது ஆகிய பணிகளை தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் செய்து வருகின்றனர்.

இந்த முகமைக்கு அதிகமான அதிகாரங்களை அளிக்கும் வகையில் பாராளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மசோதாவின் மீது மக்களவையில் கடும் விவாதம் நடந்தது. இந்த அதிகாரங்களின் மூலம் எதிர்க்கட்சியினர் மிரட்டப்படலாம் என சில கட்சிகளின் உறுப்பினர்கள் கண்டனம் தெரிவித்தனர்.

இதற்கு பதிலளித்துப் பேசிய உள்துறை மந்திரி அமித் ஷா, ‘பிரதமர் மோடி தலைமையிலான அரசு யாரையும் பழிவாங்கும் நோக்கத்தில் செயல்படாது. பயங்கரவாதத்தை முற்றிலுமாக ஒழிக்கும் நோக்கத்தில் தேசிய புலனாய்வு முகமைக்கும் மேலும் சில அதிகாரங்களை வழங்குவதற்காகவே இந்த மசோதா உருவாக்கப்பட்டுள்ளது’ என குறிப்பிட்டார்.

விவாதத்துக்கு பின்னர் ஓட்டெடுப்பு மூலம் மக்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டது.
Tags:    

Similar News