செய்திகள்
என்ஐஏ

பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேர் கைது- என்ஐஏ நடவடிக்கை

Published On 2019-07-15 05:26 GMT   |   Update On 2019-07-15 05:26 GMT
பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக டெல்லியில் 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
புதுடெல்லி:

அன்சாருல்லா என்ற பயங்கரவாத இயக்கத்தின் பெயரில் தமிழ்நாட்டில் பயங்கரவாத அமைப்பை காலூன்ற செய்வதற்கான நடவடிக்கைகளில் சிலர் மறைமுகமாக ஈடுபட்டு வருவதாக, மத்திய உளவுத்துறை மூலம் என்.ஐ.ஏ. அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. அதன் அடிப்படையில் சென்னை மற்றும் நாகையில் 4 இடங்களில் என்ஐஏ அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தினர்.

இந்த சோதனையில் செல்போன்கள், சிம் கார்டுகள், மெமரி கார்டுகள், லேப்-டாப்கள் மற்றும் பயங்கரவாதத்தை தூண்டும் வகையிலான பேனர்கள், நோட்டீசுகள், புத்தகங்கள் என பல்வேறு ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நாகையைச் சேர்ந்த அசன் அலி, ஹாரிஸ் முகமது ஆகிய 2 பேரும் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். சென்னையில் பிடிபட்ட சையது முகமது புகாரியிடம் தீவிர விசாரணை நடந்து வருகிறது.



இந்த சோதனையில் கிடைத்த தகவலின் அடிப்படையில், டெல்லியில் 14 பேரை என்ஐஏ அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அன்சருல்லா பயங்கரவாத அமைப்புக்கு நிதி திரட்டியதாக கைது செய்யப்பட்ட 14 பேரும் விமானத்தில் சென்னைக்கு அழைத்து வரப்பட உள்ளனர். அதன்பின்னர், பூந்தமல்லியில் உள்ள என்ஐஏ சிறப்பு நீதிமன்றத்தில் அவர்களை ஆஜர்படுத்த அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். 
Tags:    

Similar News