செய்திகள்
சித்தராமையா

அதிருப்தி எம்எல்ஏக்களை சமாதானப்படுத்த சித்தராமையா முயற்சி

Published On 2019-07-13 02:00 GMT   |   Update On 2019-07-13 02:00 GMT
மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா முயற்சி மேற்கொண்டு வருகிறார். இந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது தெரியவில்லை.
பெங்களூரு :

கர்நாடகத்தில் முதல்-மந்திரி குமாரசாமி தலைமையில் காங்கிரஸ்-ஜனதா தளம் (எஸ்) கூட்டணி அரசு நடந்து வருகிறது. இந்த கூட்டணி கட்சிகளை சேர்ந்த 16 எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்துள்ளனர். இதனால் கூட்டணி அரசுக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில் நேற்று நடைபெற்ற சட்டசபை கூட்டத்தில், நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த தயாராக இருப்பதாக குமாரசாமி அறிவித்தார்.

இந்த நம்பிக்கை வாக்கெடுப்பு வருகிற 17-ந் தேதி நடைபெறும் என்று கூறப்படுகிறது. இந்த நிலையில் மும்பையில் தங்கியுள்ள அதிருப்தி எம்.எல்.ஏ.க்களை சமாதானப்படுத்த முன்னாள் முதல்-மந்திரி சித்தராமையா முயற்சி மேற்கொண்டு வருகிறார். 16 எம்.எல்.ஏ.க்களில் 6 எம்.எல்.ஏ.க்களை இழுக்க காங்கிரஸ் மற்றும் ஜனதா தளம் (எஸ்) தலைவர்கள் திட்டமிட்டுள்ளனர். இந்த முயற்சி எந்த அளவுக்கு வெற்றி பெறும் என்பது தெரியவில்லை.

இதற்கிடையே நேற்று மாலை காங்கிரஸ் தலைவர்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்தினார். ஆட்சியை பாதுகாப்பது குறித்து அவர்கள் விரிவாக ஆலோசனை நடத்தினர். இந்த நிலையில் நேற்று பெங்களூருவில் இருந்த ஆனந்த்சிங் எம்.எல்.ஏ., கோவாவுக்கு புறப்பட்டு சென்றார்.
Tags:    

Similar News