செய்திகள்
சபாநாயகர் ரமேஷ்குமார்

எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரத்தில் ஜனநாயக முறைப்படி செயல்படுவேன் - சபாநாயகர் ரமேஷ்குமார்

Published On 2019-07-11 15:12 GMT   |   Update On 2019-07-11 15:12 GMT
எம்எல்ஏக்கள் ராஜினாமா விவகாரம் தொடர்பாக ஜனநாயக முறைப்படி செயல்படுவேன் என கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் தெரிவித்துள்ளார்.
பெங்களூரு,

பெங்களூருவில் உள்ள விதான் சவுதாவில் கர்நாடகா சபாநாயகர் ரமேஷ்குமார்  முன் ஆஜரான 10 எம்எல்ஏக்களில் 8 பேர் மீண்டும் புதிதாக ராஜினாமா கடிதம் அளித்தனர். அதிருப்தி எம்எல்ஏக்களுடனான சந்திப்புக்கு பின் கர்நாடக சபாநாயகர் ரமேஷ்குமார் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது: 

சபாநாயகராக நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எனக்கு உள்ளது. யாரையும் காப்பாற்ற வேண்டிய கட்டாயம் இல்லை. ராஜினாமா கடிதம் கொடுத்த 11 பேரில், 8 பேரின் ராஜினாமா கடிதம் முறையாக அளிக்கப்படவில்லை.



அந்த 8 பேரிடமும் முறையாக நேரில் ராஜினாமா கடிதத்தை அளிக்குமாறு கேட்டேன். இந்த ராஜினாமா அரசியல் சூழ்ச்சியா? அல்லது தானாக எடுத்த முடிவா? என்பது குறித்தெல்லாம் ஆய்வுசெய்ய மாட்டேன் ஜனநாயக முறைப்படி செயல்படுவேன்.

ராஜினாமா குறித்து விளக்கம் அளிக்குமாறு எம்எல்ஏக்களுக்கு முறையாக சந்தர்ப்பம் வழங்கினேன். ஆனால் அதையெல்லாம் ஏற்காமல் அவர்கள் நீதிமன்றத்திற்கு சென்றுள்ளார்கள்.

கர்நாடக எம்.எல்.ஏக்கள் விவகாரத்தில் அவசரப்பட்டு முடிவெடுக்க மாட்டேன். எம்.எல்.ஏக்கள் ஒரு சபாநாயகரை சந்திக்க உச்சநீதிமன்றம் சென்றுதான் அனுமதி பெற வேண்டுமா? மக்களுக்கு மட்டுமே பதிலளிக்க நான் கடமைப்பட்டவன் என தெரிவித்தார்.
Tags:    

Similar News