செய்திகள்
எடியூரப்பா

குமாரசாமியின் ஆட்சி 3 நாட்கள் தான் உயிருடன் இருக்கும்- எடியூரப்பா

Published On 2019-07-11 02:25 GMT   |   Update On 2019-07-11 02:25 GMT
கூட்டணி ஆட்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குமாரசாமியின் ஆட்சி 3 நாட்கள் தான் உயிருடன் இருக்கும் என்று எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா கூறியுள்ளார்.
பெங்களூரு :

பெங்களூருவில் கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் எடியூரப்பா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

சுதாகர் எம்.எல்.ஏ.வின் மனைவி எனக்கு போன் செய்தார். அப்போது தனது கணவரை காப்பாற்றி கொடுக்கும்படி கூறினார். இதனால் விதான சவுதாவுக்குள் நானும், பா.ஜனதாவினரும் வந்தோம். சுதாகர் எம்.எல்.ஏ.வுக்கு கவர்னர் மற்றும் போலீஸ் கமிஷனர் பாதுகாப்பு வழங்க வேண்டும். அத்துமீறலுக்கும் ஒரு எல்லை உள்ளது.



மந்திரி பிரியங்க் கார்கே, காங்கிரஸ் தலைவர் தினேஷ் குண்டுராவ் ஆகியோர் தாக்குதலில் ஈடுபட்டுள்ளனர். எம்.எல்.ஏ.க்கள் ராஜினாமா செய்து வருவதால் மாநில அரசு பெரும்பான்மையை இழந்து விட்டதை அனைவரும் புரிந்து கொள்ள வேண்டும். இதனால் குமாரசாமி தனது முதல்-மந்திரி பதவியை ராஜினாமா செய்ய வேண்டும்.

கர்நாடக அரசியலில் அடுத்தகட்ட நடவடிக்கை குறித்து வெள்ளிக்கிழமை (அதாவது நாளை) கட்சி மேலிடம் கூற உள்ளது. அதன்பிறகு டெல்லிக்கு சென்று மேலிட தலைவர்களுடன் ஆலோசனை நடத்துவேன். கூட்டணி ஆட்சி இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளது. குமாரசாமியின் அரசு 2 அல்லது 3 நாட்கள் மட்டும் தான் உயிருடன் இருக்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News