செய்திகள்
மக்களவையில் பேசிய திமுக எம்பி டிஆர் பாலு

நீட் விவகாரம் - மத்திய அரசின் போக்குக்கு எதிர்ப்பு தெரிவித்து பாராளுமன்றத்தில் திமுக வெளிநடப்பு

Published On 2019-07-08 08:07 GMT   |   Update On 2019-07-08 08:07 GMT
நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு கோரி தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றிய இரு மசோதாக்களையும் நிராகரித்த மத்திய அரசை எதிர்த்து தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
புதுடெல்லி:

நீட் தேர்வில் இருந்து தமிழகத்திற்கு விலக்கு அளிக்கவேண்டும் என தமிழக சட்டமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு அனுப்பப்பட்ட இரண்டு மசோதாக்களையும் மத்திய அரசு நிராகரித்தது.

இந்நிலையில், இன்று பாராளுமன்ற மக்களவையில் இந்த பிரச்சனையை மையப்படுத்தி தி.மு.க. எம்.பி. டி.ஆர்.பாலு சரமாரியான கேள்விகளை எழுப்பினார். நீட் விலக்கு தொடர்பான மசோதாக்களை மத்திய அரசு 27 மாதங்களாக கிடப்பில் போட்டது ஏன்? என்றும் அவர் வினவினார்.


இதற்கு மத்திய அரசு சரியான விளக்கம் அளிக்காததால் டி.ஆர்.பாலு தலைமையில் தி.மு.க. எம்.பி.க்கள் அனைவரும் அவையில் இருந்து வெளிநடப்பு செய்தனர். இதைதொடர்ந்து மக்களவையை பிற்பகல் 2 மணிவரை ஒத்திவைப்பதாக சபாநாயகர் அறிவித்தார்.

இதே பிரச்சனையை முன்வைத்து மாநிலங்களவையில் இருந்தும்  தி.மு.க. எம்.பி.க்கள் வெளிநடப்பு செய்தனர்.
Tags:    

Similar News