செய்திகள்
சென்னையை அடுத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரம்

பட்ஜெட்டில் அறிவிப்பு - உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலம் ஆகிறது மாமல்லபுரம்

Published On 2019-07-06 19:34 GMT   |   Update On 2019-07-06 19:34 GMT
உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களில் தமிழ்நாட்டில் சென்னையை அடுத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரம் இடம் பிடித்துள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவுக்கு வரும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை ஊக்குவிப்பதற்காக 17 முக்கிய இடங்களை உலகத்தரம் வாய்ந்த சுற்றுலா தலங்களாக உருவாக்கும் திட்டத்தை மத்திய பட்ஜெட்டில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.

அந்த 17 இடங்களின் பட்டியல் இப்போது வெளியாகி உள்ளது.

அந்தப் பட்டியலில், தமிழ்நாட்டில் சென்னையை அடுத்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க மாமல்லபுரம் இடம் பிடித்துள்ளது. மாமல்லபுரம் கடற்கரை, மண்டபங்கள், சிற்பங்கள் சுற்றுலா பயணிகளின் உள்ளத்தை கொள்ளை கொள்பவை.



பட்டியலில் இடம் பெற்றுள்ள மற்ற 16 இடங்கள் வருமாறு:-

ஆக்ராவில் உள்ள தாஜ்மஹால், பதேபூர் சிக்ரி, கேரளாவில் உள்ள குமரகம், மராட்டிய மாநிலத்தில் உள்ள அஜந்தா, எல்லோரா, டெல்லியில் உள்ள செங்கோட்டை, ஹுமாயுன் கல்லறை, குதுப்மினார், கோவாவில் உள்ள கோல்வா, கர்நாடகத்தில் உள்ள ஹம்பி, ராஜஸ்தானில் உள்ள அமீர்கோட்டை, குஜராத்தில் உள்ள சோம்நாத், கோலிவிரா, மத்தியபிரதேசத்தில் உள்ள கஜுராகோ, அசாமில் உள்ள கஜிரங்கா, பீகாரில் உள்ள மகா போதி கோவில்.

இந்த 17 இடங்களிலும் சுற்றுலா மட்டுமின்றி, கைவினைத் தொழிலை மேம்படுத்தி வேலைவாய்ப்பை பெருக்கும் திட்டத்தையும் மத்திய அரசு மேற்கொள்ள இருப்பது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News