செய்திகள்
ரபேல் போர் விமானம்

ரபேல் போர் விமானம் இன்னும் 2 மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் - பிரான்ஸ் தூதர்

Published On 2019-07-05 13:34 GMT   |   Update On 2019-07-05 13:34 GMT
பிரான்சிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் 36 போர்விமானங்களில், முதல் போர்விமானம் இன்னும் 2 மாதங்களில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என பிரான்ஸ் தூதர் தெரிவித்துள்ளார்.
போபால்:

இந்திய விமானப்படைக்கு ரபேல் போர் விமானங்களை வாங்குவதற்கு பிரான்ஸ் நாட்டுடன் மத்திய பா.ஜனதா கூட்டணி அரசு ஒப்பந்தம் போட்டுள்ளது.
 
இந்த ஒப்பந்தத்தில் ஊழல் நடைபெற்றிருப்பதாக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தொடர்ந்து குற்றச்சாட்டு கூறி வரும் வேளையில் முதல் ரபேல் விமானம் வரும் செப்டம்பர் மாதம் இந்தியா வந்து விடும் என தெரிய வந்துள்ளது.

இந்நிலையில், இந்தியாவுக்கான பிரான்ஸ் தலைமை தூதர் அலெக்சாண்ட்ரி சீக்லர் ம.பி.யின் போபாலில் இன்று செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது:

பிரான்சிடம் இருந்து இந்தியா கொள்முதல் செய்யும் 36 போர் விமானங்களில், முதல் போர் விமானம் இன்னும் 2 மாதத்தில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும். குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் செப்டம்பர் மாதம் ஒப்படைக்கப்படும். மற்ற போர் விமானங்கள் இன்னும் இரண்டு ஆண்டுகளில் இந்தியாவிடம் ஒப்படைக்கப்படும் என தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News