செய்திகள்
பெட்ரோல் டீசல்

செஸ் வரி உயர்வுக்கு பின்னர் பெட்ரோல்-டீசல் விலை கிடுகிடு உயர்வு

Published On 2019-07-05 11:57 GMT   |   Update On 2019-07-05 11:57 GMT
பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக, பெட்ரோல் விலை ரூ 2.50 மற்றும் டீசல் விலை ரூ.2.30 உயர்ந்துள்ளது.
புதுடெல்லி

பாராளுமன்றத்தில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தார். நாட்டின் நெடுஞ்சாலைகள் மற்றும் சாலைகளை நல்ல முறையில் பராமரிப்பதற்காக பெட்ரோல், டீசல் மீதான ‘செஸ் வரி’ லிட்டர் ஒன்றுக்கு ஒரு ரூபாயாக உயர்த்தப்பட்டு உள்ளது. 



இந்நிலையில், பெட்ரோல் டீசல் மீதான செஸ் வரி லிட்டருக்கு ஒரு ரூபாய் உயர்த்தப்பட்டதன் எதிரொலியாக பெட்ரோல் மற்றும் டீசலின்  விலை கிடுகிடுவென உயர்ந்துள்ளது.

நெடுஞ்சாலை வரி ரூ.1, உற்பத்தி வரி ரூ.1 என லிட்டருக்கு ரூ. 2 உயர்ந்துள்ளது. அத்துடன் உள்ளூர் வரிகளையும் சேர்த்து பெட்ரோல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.2.50ம், டீசல் விலை ஒரு லிட்டருக்கு ரூ.2.30ம் உயர்ந்துள்ளது.
Tags:    

Similar News