செய்திகள்
சாவித்திரி - நாராயணன் சீதாராமன்

பாராளுமன்றத்தில் முதன்முறையாக மகள் பட்ஜெட் தாக்கல் செய்வதை காண வந்த பெற்றோர்

Published On 2019-07-05 06:50 GMT   |   Update On 2019-07-05 07:19 GMT
பாராளுமன்ற மக்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் இன்று மத்திய பொது பட்ஜெட்டை தாக்கல் செய்வதை காண அவரது தாய்-தந்தை ஆகியோர் வருகை தந்துள்ளனர்.
புது டெல்லி:

பாராளுமன்ற தேர்தலில் பாஜக கூட்டணி அமோக வெற்றிப்பெற்று, பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான புதிய அரசு கடந்த மே மாதம் 30-ந் தேதி பதவி ஏற்றது. நிதி மந்திரியாக தமிழ்நாட்டைச் சேர்ந்த நிர்மலா சீதாராமன் பதவி ஏற்றார்.

பதவி ஏற்றவுடன் அவர் 2019-20-ம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட் தயாரிப்பு பணியில் ஈடுபட்டார். பட்ஜெட்டுக்கு முந்தைய நிகழ்வாக பொருளாதார ஆய்வறிக்கையை பாராளுமன்ற மாநிலங்களவையில் நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் நேற்று தாக்கல் செய்தார்.



இந்நிலையில் இன்று காலை 11 மணிக்கு பாராளுமன்றம் மீண்டும் கூடியது. அப்போது, மக்களவையில் மத்திய பட்ஜெட்டை நிதி மந்திரி நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். அவர் தாக்கல் செய்யும் முதல் பட்ஜெட் ஆகும்.

நிர்மலா சீதாராமன்தான் இந்தியாவின் முதல் முழு நேர பெண் நிதி மந்திரி ஆவார். மகள், நாட்டின் நிதி மந்திரியாக மத்திய பட்ஜெட்டை முதன்முறையாக தாக்கல் செய்யும் நிகழ்வை காண நிர்மலாவின் தந்தை நாராயணன் சீதாராமன், தாய் சாவித்திரி ஆகியோர் பாராளுமன்றத்துக்கு வந்தனர்.

நிதி மந்திரி நிர்மலா சீதாராமனின் தந்தை நாராயணன் சீதாராமன் இந்திய ரெயில்வே துறையில் பணிபுரிந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.


Tags:    

Similar News