செய்திகள்
சமூக வலைத்தளங்கள்

பேஸ்புக், வாட்ஸ் அப், இன்ஸ்டாகிராம் வழக்கம்போல் செயல்படும் -பேஸ்புக் அறிவிப்பு

Published On 2019-07-04 04:09 GMT   |   Update On 2019-07-04 05:05 GMT
உலகின் பல்வேறு பகுதிகளில் நேற்று மாலை தொடங்கி பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கின. இந்த பிரச்சனை தீர்ந்ததாக பேஸ்புக் நிறுவனம் அறிவித்துள்ளது.
புது டெல்லி:

பேஸ்புக், வாட்ஸ்அப் போன்ற சமூக ஊடகங்கள் இன்று அனைத்து தரப்பினரிடமும் வரவேற்பை பெற்று இருக்கின்றன. இத்தகைய ஊடகங்களில் நாள்தோறும் மணிக்கணக்கில் நேரம் செலவிடும் இளைய தலைமுறையினர் ஏராளம்.

அப்படி சமூக ஊடகங்களில் ஒன்றிப்போனவர்களுக்கு, அவற்றின் முடக்கம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி விடும். அப்படி ஒரு நிகழ்வு நேற்று நடைபெற்றது.
 
நேற்று மாலை பேஸ்புக், வாட்ஸ்அப் மற்றும் இன்ஸ்டாகிராம் போன்ற சமூக வலைத்தளங்கள் முடங்கின. இந்தியா உள்ளிட்ட ஆசிய நாடுகளிலும், ஐரோப்பா, அமெரிக்கா போன்ற பகுதிகளிலும் ஒரே நேரத்தில் இந்த செயலிழப்பு நிகழ்ந்தது.



இந்த நேரத்தில் வலைத்தள பயனாளர்களால் தங்கள் கணக்குகளை பயன்படுத்த முடியவில்லை. இதனால் பயனாளர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டது. வீடியோக்களை பதிவிறக்கம் செய்ய முடியாமலும், புகைப்படத்தை மாற்ற முடியாமலும் போனது.

இதனையடுத்து #Whatsappdown, #Facebookdown என நெட்டிசன்கள் ஹேஷ்டாக்குகளை உருவாக்க ஆரம்பித்து விட்டனர். மேலும் பல்வேறு தரப்பினரும் இதனால் அவதிக்குள்ளானார்கள்.

இந்நிலையில் தற்போது சமூக வலைத்தளங்கள் தற்போது சரி செய்யப்பட்டு விட்டதாக பேஸ்புக் நிறுவனம் கூறியுள்ளது. இது குறித்து அந்நிறுவனம் கூறுகையில், ‘நேற்று மாலை முதலே நிறுவனத்தின் முக்கிய பராமரிப்பு பணிகள் நடைப்பெற்று வந்தன.

இதன் காரணமாகவே ஒரு சில நாடுகளில் பயனாளர்களால் புகைப்படம், வீடியோ ஆகியவற்றை பதிவிறக்கம் செய்ய முடியாமல் போனது. இப்போது முழுமையாக சரி செய்து விட்டோம்’ என கூறியுள்ளது. 
Tags:    

Similar News