செய்திகள்

போலீசார் வாகனத்தின் மீது சாகசம் செய்து ‘டிக்-டாக்’கில் பதிவு -விசாரணைக்கு உத்தரவு

Published On 2019-06-27 06:36 GMT   |   Update On 2019-06-27 06:36 GMT
டெல்லியில் போலீசார் வாகனத்தின் மீது ஏறி சாகசம் செய்து டிக் டாக்கில் பதிவு செய்துள்ளார். இதனை விசாரிக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.
புது டெல்லி:

டிக்-டாக் வீடியோ ஒன்றில் ஓடிக் கொண்டிருக்கும் போலீசார் வாகனத்தில் இருந்து ஒருவர் வெளியே வருகிறார். பின்னர் வாகனத்தின் மீது ஏறிக் கொண்டு புஷ் அப் எடுத்துக் கொண்டிருக்கிறார்.

இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவவே, அது காவல்துறையைச் சேர்ந்த அதிகாரிதான் எனவும், இதுபோன்று கடமையை செய்யாமல் பணியாற்றுகின்றனர் எனவும் பலரும் விமர்சித்து வந்தனர்.



இதனையடுத்து இந்த வீடியோ குறித்து விசாரித்த டெல்லி போலீசார், அந்த வாகனம் தனியார் கான்டிராக்டர் ஒருவருடையது எனவும், ஷர்மா என்ற பெயரில் பதிவு செய்யப்பட்டது எனவும் தெரிய வந்துள்ளது.

இந்த வாகனத்தில்  ‘டெல்லி போலீஸ்’ என எழுதப்பட்டு, மேலே பேகான் விளக்கம் இருந்துள்ளது. மேலும் இந்த வீடியோவில் இருந்த நபர் குறித்து விசாரிக்கையில், அந்த வாகன ஓட்டுனரின் நண்பர் என்பதும், அவர் அதிகாரி அல்ல என்பதும் தெளிவானது.

இந்த விவகாரம் தொடர்பாக முழு தகவல்களும் அறிய இணை ஆணையாளர் மூலம் விசாரணை நடத்த வேண்டும் எனவும், மேலும் இந்த வீடியோ எந்த கணக்கில் இருந்து முதலில் பதிவேற்றம் செய்யப்பட்டது எனவும் கண்டறிந்து அந்த நபரை பிடிக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது. 


Tags:    

Similar News