செய்திகள்

ரா தலைவராக சமந்த் கோயல், ஐபி இயக்குனராக அரவிந்த் குமார் நியமனம்

Published On 2019-06-26 10:34 GMT   |   Update On 2019-06-26 10:34 GMT
ரா மற்றும் ஐபி உள்ளிட்ட உளவுத்துறை அமைப்புகளுக்கு புதிய தலைவர்களை பிரதமர் மோடி இன்று நியமனம் செய்து உத்தரவிட்டு உள்ளார்.
புதுடெல்லி:

இந்திய உளவுத்துறையில் ஒன்றான ரா அமைப்பின் தலைவராக அனில் குமார் தஸ்தானாவும், ஐ.பி. அமைப்பின் இயக்குனராக ராஜீவ் ஜெயின் ஆகியோர் பதவி வகித்து வருகின்றனர். இவர்களது பதவிக்காலம் விரைவில் முடிவடைய உள்ளது. பிரதமர் மோடி நியமனக் குழு தலைவராக இருந்து வருகிறார்.



இந்நிலையில், உளவு அமைப்புகளான புலனாய்வு பிரிவு மற்றும் ரா ஆகிய அமைப்புகளுக்கு புதிய தலைவர்களை நியமனம் செய்து பிரதமர் மோடி இன்று உத்தரவிட்டுள்ளார். புலனாய்வு பிரிவின் இயக்குனராக அரவிந்த் குமாரையும், ரா அமைப்பின் தலைவராக சமந்த் கோயலையும் நியமித்துள்ளார்.

பாலகோட் விமானப்படை தாக்குதலில் முக்கிய பங்கு வகித்தவர் சமந்த் கோயல். இதேபோல், காஷ்மீரில் பயங்கரவாதிகளை ஒடுக்கும் பணியில் கைதேர்ந்தவராக திகழ்ந்தவர் அரவிந்த் குமார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News