செய்திகள்

உ.பி.யில் அரசுஆஸ்பத்திரி கழிவறையில் குழந்தை பெற்ற பெண்

Published On 2019-06-26 06:05 GMT   |   Update On 2019-06-26 06:05 GMT
உத்தரபிரதேசம் ஷாம்லி மாவட்டத்தில் உள்ள அரசு மருத்துவமனை கழிவறையில் பெண் ஒருவர் குழந்தை பெற்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
லக்னோ:

உத்தரபிரதேச மாநிலம் ஷாம்லி மாவட்டத்தில் அரசு ஆஸ்பத்திரிக்கு பிரசவ வேதனையுடன் ஒரு கர்ப்பிணி பெண் வந்தார். வலியால் துடித்த அவருக்கு அங்கு பணியில் இருந்த நர்சு ஏஞ்சலினா பிரசவம் பார்க்கவில்லை.

இதுகுறித்து ஆஸ்பத்திரியின் சூப்பிரண்டு ரமேஷ் சந்திரா, மருத்துவ அதிகாரிகள் மிஞ்சித் கவுர், பண்டார்கர் ஆகியோரிடம் பெண்ணின் உறவினர்கள் புகார் செய்தனர். அவர்களும் கண்டுகொள்ளவில்லை. மாறாக வேறு ஆஸ்பத்திரிக்கு செல்லும்படி அறிவுறுத்தினர்.

இதற்கிடையே அந்த பெண் ஆஸ்பத்திரி கழிவறையில் குழந்தை பெற்றார். இதுகுறித்து பெண்ணின் மாமனார் மருத்துவமனை உயர் அதிகாரியிடம் புகார் செய்தார்.

அதைத்தொடர்ந்து துறை ரீதியில் விசாரணை நடத்த தலைமை மருத்துவ அதிகாரி சஞ்சய்பண்டார்கர் உத்தரவிட்டார். விசாரணை முடிவில் நர்சு ஏஞ்சலினா இடமாற்றம் செய்யப்பட்டார். மேலும் அவரது சம்பள உயர்வும் நிறுத்தப்பட்டது.

மேலும் மருத்துவ அதிகாரிகள் மிஞ்சித்கவுர், பண்டார்கர், சூப்பிரண்டு ரமேஷ் சந்திரா ஆகியோருக்கு எச்சரிக்கை கடிதம் வழங்கப்பட்டது.
Tags:    

Similar News