செய்திகள்

தண்ணீரை விவேகத்துடன் செலவழிக்க வேண்டும் - மத்திய மந்திரி பேச்சு

Published On 2019-06-26 00:37 GMT   |   Update On 2019-06-26 00:37 GMT
தண்ணீரை விவேகத்துடன் செலவழிக்க அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும் என மத்திய நீர் சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

மத்திய நீர் சக்தி துறை மந்திரி கஜேந்திரசிங் செகாவத் ஒரு விழாவில் பேசியதாவது:-

தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்பட்ட நாடுகளில் இந்தியாவும் ஒன்று. மக்கள் தொகை பெருக்கம் இதனை மேலும் பிரச்சினையாக்குகிறது. ஒவ்வொரு துளி தண்ணீரும் சேமிக்கப்படவும், பாதுகாக் கப்படவும் வேண்டும். தண்ணீரை விவேகத்துடன் செலவழிக்க அனைவரும் ஒன்றிணைந்து தொடர்ந்து முயற்சி மேற்கொள்ள வேண்டும். உணவு பற்றாக்குறை நாடாக இருந்து இப்போது உணவு ஏற்றுமதி நாடாக மாறியிருக்கிறோம். ஆனால் எதிர் காலத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இந்த நிலையை மோசமாக்கும். எனவே தண்ணீரை பாதுகாப்பதற்காக பாரம்பரிய நீர்நிலைகளுக்கு புத்துயிர் அளிக்க மிகவும் தீவிரமான முயற்சி எடுக்க வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News