செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 700 பயங்கரவாதிகளை வீழ்த்தி உள்ளோம்- மத்திய அரசு தகவல்

Published On 2019-06-25 10:08 GMT   |   Update On 2019-06-25 10:08 GMT
ஜம்மு காஷ்மீரில் கடந்த 3 ஆண்டுகளில் 700க்கும் மேற்பட்ட பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
புதுடெல்லி:

பயங்கரவாதிகளுக்கு எதிரான நடவடிக்கை தொடர்பாக பாராளுமன்ற மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு, உள்துறை இணை மந்திரி கிஷன் ரெட்டி எழுத்துப்பூர்வமாக அளித்த பதில் வருமாறு:-

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் 700க்கும் மேற்பட்ட பங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். இந்த ஆண்டு ஜனவரி முதல் ஜூன் மாதம் வரை 113 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டுள்ளனர். கடந்த ஆண்டில் 257 பேரும், 2017ம் ஆண்டில் 213 பேரும், 2016ல் 150 பேரும் கொல்லப்பட்டனர். இந்த காலகட்டத்தில் பொதுமக்கள் தரப்பில் 112 பேர் உயிரிழந்துள்ளனர். 



கிஷன் ரெட்டி

பயங்கரவாத விஷயத்தில் சிறு தவறையும் பொறுத்துக்கொள்ள முடியாது என்ற கொள்கையில் மத்திய அரசு உறுதியாக உள்ளது. பயங்கரவாதத்திற்கு எதிராக பாதுகாப்பு படையினர் தீவிர நடவடிக்கைகளை தொடர்ந்து மேற்கொண்டுள்ளனர். 

இதன் காரணமாக, பயங்கரவாதிகள் உயிரிழப்பு அதிகரித்துள்ளது. பயங்கரவாதிகளுக்கு ஆதரவு அளிக்க முயற்சிக்கும் நபர்களை பாதுகாப்பு படையினர் தொடர்ந்து கண்காணித்து வருகிறார்கள். அவர்கள் மீதான நடவடிக்கைகளையும் தொடங்கி உள்ளனர்.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News