செய்திகள்

அவசர நிலையை எதிர்த்தவர்களுக்கு தலை வணங்குகிறேன்- மோடி

Published On 2019-06-25 06:44 GMT   |   Update On 2019-06-25 07:47 GMT
முன்னாள் பிரதமர் இந்திரா காந்தி கொண்டுவந்த அவசர நிலையை எதிர்த்தவர்களுக்கு தலைவணங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி: 

இந்திரா காந்தி பிரதமராக இருந்தபோது கடந்த 1975ம் ஆண்டு ஜூன் 25-ம் தேதி அவசர நிலை பிரகடனம் செய்தார். சுமார் 21 மாதங்கள் இந்த அவசர நிலை நீடித்தது. இதன் 44-ம் ஆண்டு நினைவு நாள் இன்று அனுசரிக்கப்படுகிறது. 

இதையொட்டி பிரதமர் மோடி டுவிட்டர் மூலம் கருத்தினை பதிவிட்டுள்ளார். அதில், இந்திரா காந்தி  கொண்டுவந்த அவசர நிலையை எதிர்த்தவர்களுக்கு தலைவணங்குவதாக கூறியுள்ளார்.

"சர்வாதிகாரத்தை விட ஜனநாயகம் மேலோங்கிய தினம் இன்று. அவசரநிலையை பயமின்றி எதிர்த்தவர்களை இந்தியா தலைவணங்குகிறது. இந்தியாவின் ஜனநாயக நெறிமுறைகள் ஒரு சர்வாதிகார மனநிலையை வெற்றிகரமாக வென்றன” என மோடி டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.



பாதுகாப்புத்துறை மந்திரி ராஜ்நாத் சிங் கூறுகையில், "ஜூன் 25, 1975 அன்று அவசரநிலை அறிவிப்பு மற்றும் அதைத் தொடர்ந்து நடந்த சம்பவங்கள் இந்தியாவின் வரலாற்றில் இருண்ட அத்தியாயங்களில் ஒன்றாக பார்க்கப்படுகின்றன. இதேநாளில் அரசியலமைப்பின் ஒருமைப்பாடு நிலைநிறுத்தப்பட்டதையும் மக்கள் நினைவில் கொள்ள வேண்டும்" என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.

உள்துறை மந்திரி அமித்ஷா கூறுகையில்," நாட்டில் ஜனநாயகத்தை மீண்டும் நிலைநாட்ட லட்சக்கணக்கான தேசப்பற்றாளர்கள் அவதிப்பட்டனர். அந்த வீரர்களுக்கு சல்யூட்" என டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Tags:    

Similar News