செய்திகள்

அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் - பாராளுமன்றத்தில் காங்கிரஸ் எம்.பி. வலியுறுத்தல்

Published On 2019-06-24 09:54 GMT   |   Update On 2019-06-24 09:54 GMT
பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீட்கப்பட்ட அபிநந்தன் வரத்மான் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் என மக்களவை காங்கிரஸ் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இன்று வலியுறுத்தினார்.
புதுடெல்லி:

காஷ்மீர் மாநிலத்தின் புல்வாமா பகுதியில் கடந்த பிப்ரவரி மாதம் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய விமானப்படை பாகிஸ்தானுக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியபோது ஒரு இந்திய போர் விமானம் சுட்டு வீழ்த்தப்பட்டது. அதில் சென்ற விமானப்படை வீரர் அபிநந்தன் வரத்மானை பாகிஸ்தான் சிறைபிடித்தது.

இந்திய அரசின் முயற்சியால் மீட்கப்பட்டு தாயகம் திரும்பிய அபிநந்தன் டெல்லி ராணுவ ஆஸ்பத்திரியில் சிகிச்சை நடைமுறைகள் முடிந்ததையடுத்து ஒருமாதம் ஓய்வுக்கு பின்னர் பணிக்கு திரும்பினார்.



இந்நிலையில், பாகிஸ்தானிடம் பிடிபட்டு மீட்கப்பட்ட அபிநந்தன் வரத்மானுக்கு உயரிய விருது அளித்து கவுரவிக்க வேண்டும். அபிநந்தன் மீசையை ‘தேசிய மீசை’ ஆக அறிவிக்க வேண்டும் என பாராளுமன்ற மக்களவையில் காங்கிரஸ் எம்.பி.க்கள் குழு தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி இன்று வலியுறுத்தினார்.
Tags:    

Similar News