செய்திகள்

பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்கு புது குடைச்சல் ஆரம்பம்

Published On 2019-06-24 05:24 GMT   |   Update On 2019-06-24 05:24 GMT
பாகிஸ்தானில் இருந்து இந்திய எல்லைக்கு புதிய சிக்கல் ஆரம்பமாகி உள்ளது. இது குறித்து இந்தியா-பாகிஸ்தான் இடையே ஆலோசனை கூட்டம் நடத்தப்பட்டுள்ளது.
ஜெய்ப்பூர்:

இந்தியா-பாகிஸ்தான் இடையே காஷ்மீர் குஜராத் மற்றும் ராஜஸ்தான் ஆகிய மாநிலங்களையொட்டி சுமார் 3300 கிமீ நீளம் கொண்ட எல்லைப்பகுதி அமைந்துள்ளது.

இந்நிலையில் ராஜஸ்தான் மாநிலத்தை ஒட்டியுள்ள பாகிஸ்தான் எல்லையோட கிராமங்களில் இருந்து ஆண்டுதோறும் ஜூன் முதல் அக்டோபர் மாதம் வரை ராஜஸ்தானுக்குள் பறந்து வரும் வெட்டுக்கிளிகளின் கூட்டம் ஏராளமான பயிர்களை நாசப்படுத்துவதுடன் பொது மக்களுக்கும் இடையூறாக உள்ளன.



இந்த வெட்டுக்கிளிகளை அழிப்பது குறித்து பார்மர் பகுதியில் இந்திய உயர் அதிகாரிகள், பாகிஸ்தான் உயர் அதிகாரிகளுடன் கடந்த ஜூன் 19ம் தேதி ஆலோசனை நடத்தினர்.



இது குறித்து வெட்டுக்கிளி எச்சரிக்கை அமைப்பைச் சேர்ந்த அதிகாரி மகேஷ் சந்திரா கூறுகையில், ‘வெட்டுக்கிளிகளை அழிக்க எங்கள் கருவிகள் தயாராக உள்ளன. இந்த வெட்டுக்கிளிகள் ஜூன் முதல் அக்டோபர் வரை உள்ள சீசனில் கூட்டமாக பறக்கக் கூடியவை.

இம்முறை மலாத்தியோன் எனப்படும் புதிய பூச்சுக் கொல்லிகள் இவற்றை அழிக்க பயன்படுத்தப்பட உள்ளன. சூழ்நிலை நம் கட்டுப்பாட்டுக்குள்தான் இருக்கிறது. இது குறித்து தகவல் தெரிவிக்க ஹெல்ப்லைன் கொடுக்கப்பட்டுள்ளது’ என கூறியுள்ளார்.





Tags:    

Similar News