செய்திகள்

ரூ.7.5 லட்சம் தண்ணீர் வரி பாக்கி வைத்திருக்கும் முதல்வரை தெரியுமா?

Published On 2019-06-24 04:46 GMT   |   Update On 2019-06-24 05:48 GMT
ரூ.7.5 லட்சம் தண்ணீர் வரி பாக்கியை செலுத்துமாறு முதல் மந்திரிக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
மும்பை:

மகாராஷ்டிரா மாநிலத்தின் முதல் மந்திரி மற்றும் பாஜகவின் முக்கிய தலைவர்களுள் ஒருவர் தேவேந்திர பட்னாவிஸ். இவர் நாக்பூர் தொகுதி சட்டமன்ற உறுப்பினராகவும் உள்ளார்.

இந்நிலையில் ஒரு மாநிலத்தின் முதல் மந்திரியாக முக்கிய பொறுப்பு வகிக்கும் இவர், ரூ.7,44,981 தண்ணீர் வரி பாக்கி வைத்துள்ளார் என மும்பை நகராட்சி தெரிவித்துள்ளது.



மேலும் தேவேந்திர பட்னாவிஸ் மட்டுமின்றி 18 மந்திரிகளும் தண்ணீர் வரி பாக்கி வைத்துள்ளனர் என கூறியுள்ளது. இதனையடுத்து வரி பாக்கியினை உடனடியாக செலுத்துமாறு 19 பேருக்கும் மும்பை நகராட்சி நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தேவேந்திர பட்னாவிஸ், தனது 21 வயதிலேயே நாக்பூர் நகராட்சி மன்றத்தில் பாஜக  உறுப்பினராக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதன்பின்னர் மேயர், சட்டமன்ற உறுப்பினர் என பல்வேறு பதவிகள் வகித்து வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Tags:    

Similar News