செய்திகள்

உத்தரகாண்ட் பனிமலையில் கடந்த மாதம் காணாமல் போனவர்களில் 7 பேர் பிரேதங்களாக மீட்பு

Published On 2019-06-23 14:18 GMT   |   Update On 2019-06-23 14:18 GMT
உத்தரகாண்டில் உள்ள நந்தா தேவி சிகரத்திற்கு கடந்த மாதம் மலை ஏற்றம் சென்று காணாமல் போனவர்களில் 7 பேர் பிரேதங்களாக இன்று மீட்கப்பட்டனர்.
டேராடூன்:-

உத்தரகாண்ட் மாநிலத்தில் இமயமலை தொடரில் அமைந்துள்ள 17,800 அடி உயரமுள்ள நந்தா தேவி சிகரத்திற்கு அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா நாடுகளைச் சேர்ந்த 7 மலையேற்ற வீரர்கள் சென்றனர். அவர்களுடன் பயிற்சி நிறுவன அதிகாரி ஒருவரும் வழிகாட்டியாக சென்றிருந்தார். கடந்த மாதம் 13-ந்தேதி முன்சியாரி பகுதியில் இருந்து மலை ஏற்றம் சென்ற அவர்கள் திடீரென மாயமாகினர்.

இதையடுத்து அவர்களை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. இந்திய விமானப்படை ஹெலிகாப்டர்கள், இந்தோ-திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீசார் ஆகியோர் மீட்புப்பணியில் ஈடுபட்டிருந்தனர்.

இந்நிலையில், 7 மலையேற்ற வீரர்களின் பிரேதங்களை இந்தோ திபெத் எல்லைப் பாதுகாப்பு போலீசார் இன்று மீட்டனர்.  ஒரு மாதத்திற்கு பிறகு அவர்களின் பிரேதங்கள் மீட்கப்பட்டுள்ளன. காணாமல் போன மற்றொருவரின் உடலை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. 
Tags:    

Similar News