செய்திகள்

பீகாரில் மூளைகாய்ச்சலுக்கு குழந்தைகள் சிகிச்சை பெறும் பகுதி அருகே மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு

Published On 2019-06-23 11:47 GMT   |   Update On 2019-06-23 11:47 GMT
பீகார் மாநிலத்தின் முசாபர்பூர் மாவட்டத்தில் மூளைகாய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்டு 110 குழந்தைகள் பலியான அரசு மருத்துவமனையில் மேற்கூரை இடிந்து விழுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
முசாபர்பூர்:-

பீகார் மாநிலத்தில் குழந்தைகளை தாக்கும் மூளை காய்ச்சல் நோய் பரவி வருகிறது. மூளை காய்ச்சலுக்கு, இதுவரை 130 குழந்தைகள் பலியாகியுள்ளன. முசாபர்பூர் நகரில் உள்ள ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில் மட்டும் 110 குழந்தைகள் பலியாகியுள்ளன.

இந்நிலையில், ஸ்ரீ கிருஷ்ணா மருத்துவமனையில் மூளைகாய்ச்சல் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகள் சிகிச்சை பெறும் பகுதி அருகே கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால் அங்கு சிகிச்சை பெற்று வரும் குழந்தைகளின் பெற்றோர் அதிர்ச்சி அடைந்தனர்.



இது தொடர்பாக மருத்துவமனை கண்காணிப்பாளர் சுனில் குமார் சாஹி கூறுகையில், " குழந்தைகள் சிகிச்சை பெறும் பகுதியில் கான்கிரீட் மேற்கூரை இடிந்து விழவில்லை, வராண்டாவில் தான் இடிந்து விழுந்தது. இதனால் யாருக்கு காயம் ஏற்படவில்லை. என கூறினார்.
Tags:    

Similar News