செய்திகள்

தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய 4 பேர் ராஜ்யசபையில் பாஜக எம்பிக்களாக செயல்பட அனுமதி

Published On 2019-06-21 14:18 GMT   |   Update On 2019-06-21 15:10 GMT
தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய 4 பேர் ராஜ்யசபாவில் பாஜக எம்பிக்களாக செயல்படுவதற்கு சபாநாயகர் அனுமதித்துள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி:

பாராளுமன்றத் தேர்தலுடன் ஆந்திர மாநில சட்டசபைக்கும் தேர்தல் நடைபெற்றது. சட்டசபைத் தேர்தலில் சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேசம் தோல்வியை தழுவியது.

பாராளுமன்றத் தேர்தலில் 3 தொகுதிகளில் மட்டுமே தெலுங்கு தேசம் வென்றது. மாநிலத்தில் ஆட்சியை இழந்ததுடன் பாராளுமன்ற எம்.பி.க்களின் எண்ணிக்கையும் குறைந்தது.



இதற்கிடையே, ஆந்திராவின் தெலுங்கு தேசம் கட்சியை சேர்ந்த ராஜ்யசபா எம்.பி.க்களான ஒய்.எஸ்.சவுத்ரி, ரமேஷ், வெங்கடேஷ் உள்ளிட்ட  4 பேர், பா.ஜ.க. செயல் தலைவர் ஜே.பி.நட்டா முன்னிலையில் டெல்லியில் நேற்று அக்கட்சியில் இணைந்தனர். அவர்களுக்கு பூங்கொத்து கொடுத்து வரவேற்றார்.

இந்நிலையில், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய 4 பேர் ராஜ்யசபாவில் பாஜக எம்பிக்களாக செயல்படுவதற்கு சபாநாயகர் அனுமதித்துள்ளதாக மத்திய மந்திரி பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் செய்தியாளர்களிடம் கூறுகையில், தெலுங்கு தேசம் கட்சியில் இருந்து விலகிய 4 பேரையும் பா.ஜ.க. எம்.பி.க்கள் பட்டியலில் இணைப்பதற்கான வேலைகள் ராஜ்யசபை அலுவலகத்தில் இன்று காலை முடிந்துவிட்டது. இதையடுத்து, அவர்களை ராஜ்யசபையில் பா.ஜ.க. எம்.பி.க்களாக செயல்பட சபாநாயகர் அனுமதி அளித்துள்ளதாக தெரிவித்தார்.
Tags:    

Similar News