செய்திகள்

உ.பி.யில் பயங்கரம்- ரூ.20 கொடுக்காததால் லாரி டிரைவர் சுட்டுக் கொலை

Published On 2019-06-20 11:58 GMT   |   Update On 2019-06-20 11:58 GMT
உத்தர பிரதேசத்தில் 20 ரூபாய்க்காக லாரி டிரைவர் சுட்டுக் கொல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பண்டா: 

உத்தரபிரதேச மாநிலத்தின் ஹமிர்பூர் மாவட்டத்தில் புல்சி என்ற மணல் குவாரி இயங்கி வருகிறது. இந்த குவாரியில் மணல் அள்ள வரும் லாரி டிரைவர்களிடம் இருந்து ரூ.50 பாதுகாவலர்களால் வாங்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இன்று அதிகாலை 4 மணியளவில் அருண்குமார் என்பவர் குவாரியில் மணல் அள்ள சென்றுள்ளார். அப்போது அவரிடம் பாதுகாவலர் ஒருவர் ரூ.50 கேட்டுள்ளார். 

ரூ.30 மட்டுமே கொடுத்த அருண்குமார், ரூ.20 தர மறுத்துள்ளார். இதனால் பாதுகாவலருக்கும், அவருக்கும் இடையே வாக்குவாதம் முற்றியது. 



இதனால் ஆத்திரமடைந்த பாதுகாவலர், டிரைவர் அருண்குமாரை துப்பாக்கியால் சுட்டு கொலை செய்தார். இதையடுத்து தகவலறிந்து சம்பவ  காவல்துறையினர் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். 

உயிரிழந்த டிரைவர் அருண்குமாரின் தந்தை, மணல் குவாரி உரிமையாளர் உட்பட 4 பேர் மீது போலீசில் புகார் தெரிவித்துள்ளார். இச்சம்பவம் தொடர்பாக அப்பகுதியில் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர். 
Tags:    

Similar News