செய்திகள்

உண்மையை கூறியது ஒரு குற்றமா? -காங்கிரசில் இருந்து நீக்கப்பட்ட ரோஷன் பெய்க்

Published On 2019-06-20 07:06 GMT   |   Update On 2019-06-20 07:06 GMT
கர்நாடகா மாநில காங்கிரஸ் கட்சியில் இருந்து நீக்கப்பட்ட முக்கிய தலைவர்களுள் ஒருவரான ரோஷன் பெய்க் உண்மையை கூறியது ஒரு குற்றமா என கேள்வி எழுப்பியுள்ளார்.
பெங்களூரு:

பாராளுமன்ற தேர்தலில் கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி படுதோல்வியை சந்தித்தது. இதனையடுத்து அம்மாநில காங்கிரஸ் கமிட்டி நேற்று கலைக்கப்பட்டது.

இதையடுத்து காங்கிரஸ் தலைவர்களுள் ஒருவரான ரோஷன் பெய்க்கினை, அக்கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி அம்மாநில கட்சி தலைவர்கள் பரிந்துரைத்தனர்.



இதனையடுத்து அவர் கட்சியில் இருந்து நீக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார். இது குறித்து ரோஷன் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

நான் காங்கிரஸ் கட்சியின் நேர்மையான தொண்டன். காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்திக்கு எதிராக நான் எதையும் செய்யவில்லை. மாநில காங்கிரஸ் கட்சி தலைவர்களின் செயல்பாடுகள் குறித்தே கருத்து தெரிவித்தேன்.

உண்மையை கூறியது ஒரு குற்றமா?. கர்நாடகா மாநிலத்தில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்ததற்கு தலைவர்கள் ஏன் பொறுப்பேற்கவில்லை என்றுதான் கேட்டேன்.

இக்கட்சி இந்திய தேசிய காங்கிரஸ் தானே தவிர, சித்து காங்கிரஸ் அல்ல. நமது கட்சி தலைவர்களே, கட்சிக்கு எதிராக பாராளுமன்ற தேர்தலில் செயல்பட்டனர். நமது கட்சி தலைவர்கள் மீதான லட்சக்கணக்கான தொண்டர்களின் எண்ணத்தினையே நான் எடுத்துரைத்தேன்.

இவ்வாறு அவர் கூறினார்.



Tags:    

Similar News