செய்திகள்

2 அதிருப்தி எம்எல்ஏக்களை தகுதிநீக்கம் செய்ய வேண்டும்- சபாநாயகரிடம் ஆம் ஆத்மி கட்சி மனு

Published On 2019-06-20 04:11 GMT   |   Update On 2019-06-20 04:11 GMT
டெல்லியில் கட்சி தாவிய 2 எம்எல்ஏக்களை தகுதி நீக்கம் செய்யும்படி ஆம் ஆத்மி கட்சி சார்பில் சபாநாயகரிடம் மனு கொடுக்கப்பட்டுள்ளது.
புதுடெல்லி:

டெல்லியில் ஆளுங்கட்சியான ஆம் ஆத்மி கட்சியைச் சேர்ந்த எம்எல்ஏக்கள் அனில் பாஜ்பாய், தேவேந்தர் ஷெராவத் ஆகியோர் கட்சி தலைமை மீதான அதிருப்தியில், கடந்த மே மாதம் பாஜகவில் இணைந்தனர்.

இதையடுத்து கட்சி தாவல் தடை சட்டத்தின்கீழ் அவர்களை தகுதிநீக்கம் செய்யவேண்டும் என ஆம் ஆத்மி கட்சி கூறி வருகிறது. இதற்காக சபாநாயகரிடம் நேற்று மனு கொடுக்கப்பட்டுள்ளது. இதையடுத்து இருவரிடமும் சபாநாயகர் விளக்கம் கேட்டுள்ளார். இத்தகவலை கட்சியின் செய்தித் தொடர்பாளர் சவுரப் பரத்வாஜ் கூறியுள்ளார். இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் வர உள்ள நிலையில், ஆம் ஆத்மி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

சபாநாயகரிடம் இருந்து விளக்கம் கேட்டு நோட்டீஸ் வந்திருப்பதாக ஷெராவத் எம்எம்எல்ஏ கூறியுள்ளார். ஆனால், ஆதாயம் தரும் பதவி தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளதால் தன் மீது ஆம் ஆத்மி கட்சி நடவடிக்கை எடுக்க முடியாது என பாஜ்பாய் கூறினார்.

இதேபோல் 20 ஆம் ஆத்மி கட்சி எம்எல்ஏக்களை சபாநாயகர் தகுதி நீக்கம் செய்தது செல்லாது என டெல்லி உயர்நீதிமன்றம் கடந்த ஆண்டு தீர்ப்பு வழங்கியது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News