செய்திகள்

மக்களவையில் மத்திய மந்திரிகளை அறிமுகம் செய்து வைத்த மோடி

Published On 2019-06-19 21:03 GMT   |   Update On 2019-06-19 21:03 GMT
மந்திரி சபை மாற்றியமைக்கபட்டதால் புதிய மந்திரிகளை பிரதமர் மோடி நேற்று மக்களவையில் அறிமுகம் செய்துவைத்தார்.
புதுடெல்லி:

மத்தியில் புதிய அரசு பொறுப்பேற்கும் போதும், மந்திரி சபை மாற்றியமைத்தலின் போதும், புதிய மந்திரிகளை பாராளுமன்றத்தின் இரு அவைகளிலும் அறிமுகம் செய்து வைப்பது பிரதமரின் வழக்கமாகும். அந்தவகையில் பிரதமர் மோடி தலைமையிலான மந்திரி சபையில் 24 கேபினட் மந்திரிகள், 9 தனிப்பொறுப்புடன் கூடிய ராஜாங்க மந்திரிகள், 24 இணை மந்திரிகள் புதிதாக பொறுப்பேற்று உள்ளனர்.

இந்த மந்திரிகளை பிரதமர் மோடி நேற்று மக்களவையில் அறிமுகம் செய்துவைத்தார். அப்போது அவர், ஒவ்வொருவரின் பெயரையும் தனித்தனியாக அழைத்து, அவர்களின் துறைகளை மக்களவை உறுப்பினர்களுக்கு எடுத்துக்கூறினார். அப்போது மந்திரிகள் ஒவ்வொருவரும் எழுந்து உறுப்பினர்களை பார்த்து வணக்கம் செலுத்தினர். அவர்களுக்கு பிற உறுப்பினர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.

இதைத்தொடர்ந்து பிரதமர் மோடி மாநிலங்களவையில் நாளை (வெள்ளிக் கிழமை) புதிய மந்திரிகளை அறிமுகம் செய்து வைப்பார் என கூறப்படுகிறது.
Tags:    

Similar News