செய்திகள்

காஷ்மீருக்கு பதிலாக விராட் கோலியை கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் - வைரலாகும் புகைப்படத்தின் உண்மை பின்னணி

Published On 2019-06-19 12:06 GMT   |   Update On 2019-06-19 12:06 GMT
காஷ்மீருக்கு பதிலாக விராட் கோலியை கேட்கும் பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்களின் வைரலாகும் புகைப்படத்தின் உண்மை பின்னணியை பார்ப்போம்.



உலக கோப்பை கிரிக்கெட் 2019 தொடரில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய போட்டி நிறைவுற்று சில தினங்கள் ஆகிவிட்டது. எனினும், கிரிக்கெட் பிரியர்கள் இப்போட்டியை விடுவதாக தெரியவில்லை.

சமூக வலைதளங்களில் இந்தியா - பாகி்ஸ்தான் அணிகள் மோதிய கிரிக்கெட் போட்டி தொடர்பான விவரங்கள் மீம்ஸ்களாக தொடர்ந்து டிரெண்டிங்கில் இடம்பிடித்து வருகிறது. அவ்வாறு டிரெண்ட் ஆகும் புகைப்படங்களில் சர்ச்சை கிளப்பும் பேனர் ஒன்றை பாகிஸ்தான் கிரிக்கெட் ரசிகர்கள் கையில் பிடித்திருக்கின்றனர். 

அந்த பேனரில், 'எங்களுக்கு காஷ்மீர் வேண்டாம், விராட் கோலியை எங்களிடம் கொடுங்கள்' என்ற வாசகம் இடம்பெற்றிருக்கிறது. உண்மையில் இந்த புகைப்படத்தை ஆய்வுக்கு உட்படுத்தியதில், இந்த புகைப்படத்தில் இருக்கும் பேனர் உண்மை தான் என்பதும், அதில் இருக்கும் வாசகம் மட்டும் மாற்றப்பட்டிருப்பது உறுதியாகி இருக்கிறது.  



ட்விட்டரில் ஐ.பி.என். சினா என்பவர் இந்த புகைப்படத்தை பதிவிட்டிருக்கிறார். இதனை சுமார் பலர் ரீட்வீட் மற்றும் லைக் செய்து வருகின்றனர். உண்மையில் வைரலாகும் இந்த புகைப்படத்தின் பேனரில் 'எங்களுக்கு அசாடி வேண்டும்' என்ற வாசகம் எழுதப்பட்டிருக்கும். தற்சமயம் வைரலாகும் இந்த புகைப்படம் 2016 ஆம் ஆண்டு எடுக்கப்பட்டதாகும். 

போலி செய்திகள் அதிபயங்கர விளைவுகளை ஏற்படுத்தக்கூடியவை. பல சமயங்களில் போலி செய்திகளால் உயிரிழப்புகள் ஏற்படவும் அதிக வாய்ப்புகள் உண்டு. ஏற்கனவே போலி செய்தி பரவியதால் பலர் உயிரிழந்து இருக்கின்றனர்.
Tags:    

Similar News