செய்திகள்

தெருவில் சென்றவர்களை முட்டித்தள்ளும் காளை- வீடியோ இணைப்பு

Published On 2019-06-19 11:39 GMT   |   Update On 2019-06-19 11:43 GMT
குஜராத் மாநிலம் ராஜ்கோட்டில் தெருவில் சென்றவர்களை காளை ஒன்று முட்டித் தள்ளும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
ராஜ்கோட்:

ராஜ்கோட்டில் நேற்று மாலை சுமார் 5 மணியளவில் முதியவர் ஒருவர் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். தெருவோரம் நின்றுக்கொண்டிருந்த காளை, அவர் அருகில் வந்ததும் திடீரென பாய்ந்து அவரை கீழே தள்ளியது. சற்று நேரம் நின்று பார்த்த முதியவரை மீண்டும் துரத்திச் சென்று சுவர் ஓரமாக அண்டிய அவரை கொம்பால் முட்டி தூக்கியது.

அருகிலிருந்த ஒரு இளைஞர் தண்ணீரை ஊற்றி காளையை விரட்டி, முதியவரை மீட்டு தனது வீட்டுக்கு அழைத்து சென்றார். சற்று நேரத்தில் அவ்வழியாக பைக்கில் வந்த மற்றொரு இளைஞனின் வாகனத்தையும் அந்த காளை இதே போல் முட்டித் தள்ளியது.

தெருவில் சென்றவர்களை அச்சுறுத்திய காளை மீட்கப்பட்டு, கோசாலையில் விடப்பட்டது.



இதற்கிடையே காளை முட்டி தள்ளும் வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாக பரவி வருகிறது.
Tags:    

Similar News