செய்திகள்

கர்நாடகா மாநில காங்கிரஸ் கமிட்டி கலைப்பு -அதிகாரப்பூர்வ அறிவிப்பு

Published On 2019-06-19 09:17 GMT   |   Update On 2019-06-19 09:17 GMT
கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டியை கலைப்பதாக அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.
பெங்களூரு:

பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி படுதோல்வி அடைந்தது. தேசிய அளவில் இரண்டாவது மிகப்பெரிய கட்சியான காங்கிரஸ் 52 இடங்களை மட்டுமே கைப்பற்றியது.

தமிழகத்தில் திமுகவுடன் கூட்டணி அமைத்து வெற்றி கண்டது. ஆனால், கர்நாடகா மாநிலத்தில் 2 இடங்களில் மட்டுமே வெற்றிப்பெற்றது.

இதனையடுத்து கர்நாடகா மாநிலத்தில் படுதோல்வி அடைந்ததால், அம்மாநில காங்கிரஸ் கமிட்டியை கலைக்க அகில இந்திய காங்கிரஸ் கமிட்டி  உத்தரவிட்டுள்ளது.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் பொதுச் செயலாளர் கே.சி. வேணுகோபால் வெளியிட்ட அறிக்கையில், ‘கர்நாடகா மாநிலத்தின் காங்கிரஸ் கமிட்டி கலைக்கப்படுகிறது. அதே சமயம் மாநில காங்கிரஸ் கமிட்டி தலைவர் மற்றும் செயல் தலைவர் ஆகியோர் தொடர்ந்து பதவியில் நீடிப்பார்கள்’ என கூறியுள்ளார்.

Tags:    

Similar News