செய்திகள்

சுமித்ரா மகாஜனுடன் சபாநாயகராக பொறுப்பேற்கும் ஓம் பிர்லா சந்திப்பு

Published On 2019-06-18 12:15 GMT   |   Update On 2019-06-18 12:15 GMT
புதிய சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள பா.ஜ.க. எம்.பி. ஓம் பிர்லா, முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனை டெல்லியில் இன்று சந்தித்தார்.
புதுடெல்லி:

பா.ஜ.க. மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சி அமைத்துள்ளது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கி உள்ள நிலையில், சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெறுகிறது. இதில், பா.ஜ.க. எம்.பி. ஓம் பிர்லா (57) தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன. 

ராஜஸ்தான் மாநிலம் கோட்டாபண்டி பாராளுமன்றத் தொகுதியில் இருந்து எம்.பி.யாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஓம் பிர்லா வேட்பாளராக நிறுத்தப்படும்.பட்சத்தில், மக்களவையில் பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மெஜாரிட்டி இருப்பதால், அவர் எளிதில் வெற்றி பெற்று சபாநாயகராக தேர்வு செய்யப்படுவார். 



இந்நிலையில், புதிய சபாநாயகராக பொறுப்பேற்க உள்ள பா.ஜ.க. எம்.பி. ஓம் பிர்லா, முன்னாள் சபாநாயகர் சுமித்ரா மகாஜனை டெல்லியில் இன்று சந்தித்துப் பேசினார். 

இதுதொடர்பாக சுமித்ரா மகாஜன் கூறுகையில், ஓம் பிர்லா எனது நண்பர். தேசிய ஜனநாயக கூட்டணி சார்பில் மக்களவை சபாநாயகராக
தேர்வு செய்யப்பட்டுள்ளது சரியானது. அவர் மக்களவையை திறம்பட வழிநடத்துவார் என நம்புகிறேன் என தெரிவித்தார்.
Tags:    

Similar News