செய்திகள்

மக்களவை சபாநாயகராக பாஜக எம்பி ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்படுவார் என தகவல்

Published On 2019-06-18 05:49 GMT   |   Update On 2019-06-18 06:13 GMT
மக்களவை சபாநாயகராக ராஜஸ்தானைச் சேர்ந்த பாஜக எம்பி ஓம் பிர்லா தேர்ந்தெடுக்கப்படலாம் என தகவல் வெளியாகி உள்ளது.
புதுடெல்லி:

பாஜக மீண்டும் தனிப்பெரும்பான்மையுடன் ஆட்சியமைத்துள்ளது. 17-வது மக்களவையின் முதல் கூட்டத் தொடர் தொடங்கி உள்ள நிலையில், சபாநாயகர் தேர்தல் நாளை நடைபெற உள்ளது. இதில், பாஜக எம்பி ஓம் பிர்லா (வயது 57) தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளராக நிறுத்தப்படுவார் என தகவல்கள் வெளியாகி உள்ளன.



இவர் ராஜஸ்தான் மாநிலம் கோட்டாபண்டி பாராளுமன்றத் தொகுதியில் இருந்து எம்பியாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். ஓம் பிர்லா வேட்பாளராக நிறுத்தப்படும்பட்சத்தில், மக்களவையில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணிக்கு மெஜாரிட்டி இருப்பதால், அவர் எளிதில் வெற்றி பெற்று சபாநாயகராக தேர்வு செய்யப்படுவர்.

ராஜஸ்தான் மாநிலத்தில் இருந்து ஓம் பிர்லா மூன்று முறை எம்எல்ஏவாகவும், இரண்டு முறை எம்பியாகவும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

பொதுவாக சீனியாரிட்டி அடிப்படையில்தான் சபாநாயகர் பதவி வழங்கப்படும். ஆனால், ஒரு முறை மற்றும் இரண்டு முறை எம்பியாக இருந்தவர்களும் சபாநாயகர் பதவிக்கு வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Tags:    

Similar News