செய்திகள்

ஸ்டிரைக்கையும், போட்டியையும் ஒப்பிடாதீர்கள்: அமித் ஷாவுக்கு பாகிஸ்தான் அறிவுரை

Published On 2019-06-17 16:34 GMT   |   Update On 2019-06-17 16:34 GMT
இந்திய ராணுவம் பாகிஸ்தான் மீது நடத்திய தாக்குதலையும், கிரிக்கெட் போட்டியையும் ஒப்பிடாதீர்கள் என்று அமித் ஷாவுக்கு பாகிஸ்தான் அறிவுரை வழங்கியுள்ளது.
உலகக்கோப்பையில் இந்தியா - பாகிஸ்தான் அணிகள் மோதிய ஆட்டம் மான்செஸ்டரில் நேற்று நடைபெற்றது. இதில் இந்தியா டக்வொர்த் லிவிஸ் விதிப்படி 89 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய கிரிக்கெட் அணிக்கு உள்துறை மந்திரியான அமித் ஷா வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தியா வெற்றி குறித்து அமித் ஷா தனது டுவிட்டர் பக்கத்தில் ‘‘இந்திய கிரிக்கெட் அணியால் பாகிஸ்தான் மீது மற்றொரு ஸ்டிரைக், முடிவு ஒரே மாதிரியானது. சிறப்பாக விளையாடிய ஒட்டுமொத்த அணிக்கும் பாராட்டுக்கள். ஒவ்வொரு இந்தியனும் வெற்றி குறித்து பெருமையடைகிறான்’’ என்று பதிவிட்டிருந்தார்.

இதற்கு பாகிஸ்தான் ராணுவத்திற்கான செய்தி தொடர்பாளர் ஸ்டிரைக் மற்றும் கிரிக்கெட் போட்டி ஆகியவற்றை ஒப்பிடாதீர்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார்.

இதுகுறித்து பாகிஸ்தான் ராணுவ செய்தி தொடர்பாளர் மேஜர் ஜென் ஆசிப் கஃபூர் கூறுகையில் ‘‘டீயர் அமித் ஷா, ஆமாம் உங்கள் அணி வெற்றி பெற்றது. சிறப்பாக விளையாடியது. வெவ்வேறு வகையில் இரண்டு விஷயங்களை ஒப்பிட முடியாது. அதுதான் ஸ்டிரைக், போட்டி என்ற வெவ்வேறு விஷயங்கள்’’ என்று தெரிவித்துள்ளார்.

மேலும், சந்தேகம் இருந்தால் தயது செய்து இந்தியாவுக்கு பாகிஸ்தான் ராணுவம் இரண்டு இந்திய விமானத்தை சுட்டு வீழ்த்தி பதிலடி கொடுத்ததை பார்க்கலாம் என்று சுட்டுக்காட்டியுள்ளார்.
Tags:    

Similar News