செய்திகள்

காஷ்மீர் - பயங்கரவாதிகள் தாக்குதலில் ராணுவ மேஜர் வீரமரணம்

Published On 2019-06-17 10:34 GMT   |   Update On 2019-06-17 11:26 GMT
காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் இன்று பயங்கரவாதிகளுடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் படுகாயமடைந்த ராணுவ மேஜர் வீரமரணம் அடைந்தார்.
ஜம்மு:

ஜம்மு-காஷ்மீர் மாநிலத்தின் அனந்த்நாக் மாவட்டத்தில் மாவட்டத்துக்குட்பட்ட பிட்ரூ அக்கிங்கம் பகுதியில் இன்று பாதுகாப்பு படையினருடன் நடந்த துப்பாக்கிச் சண்டையில் இரு பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.

19-வது ராஷ்டரிய ரைபிள்ஸ் படைப்பிரிவை சேர்ந்த ராணுவ மேஜர், ஒரு உயரதிகாரி மற்றும் இரு வீரர்கள் காயமடைந்தனர்.



காயமடைந்த அனைவரும் சிகிச்சை பெற்றுவந்த நிலையில் சிகிச்சை பலனின்றி ராணுவ மேஜர் வீரமரணம் அடைந்தார்.
Tags:    

Similar News