செய்திகள்

உ.பி-யில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்க வேண்டும்: அகிலேஷ் யாதவ்

Published On 2019-06-15 11:57 GMT   |   Update On 2019-06-15 11:57 GMT
உத்திரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கை பாதுகாக்க ஆளுநர் நடவடிக்கை எடுக்கவேண்டும் என அகிலேஷ் யாதவ் வலியுறுத்துயுள்ளார்.
லக்னோ:

உத்திரபிரதேச மாநிலத்தில் முதல்வர் யோகி ஆதித்யநாத் தலைமையிலான பா.ஜனதா அரசு ஆட்சி நடத்தி வருகிறது. இந்நிலையில் மாநிலத்தின் பிரதான ஏதிர்கட்சியான சமாஜ்வாதி கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் உத்திரபிரதேசத்தில் சட்டம் ஒழுங்கு சீர்கெட்டு உள்ளது என குற்றஞ்சாட்டியுள்ளார். இது குறித்து மாநிலத்தின் ஆளுநரை அவரது அலுவலகத்தில் சந்தித்து சட்டம் ஒழுங்கை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.
 
ஆளுநர் உடனான சந்திப்பிற்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அகிலேஷ் யாதவ் கூறியதாவது:-

உத்திரபிரதேசத்தில் முந்தைய சமாஜ்வாடி கட்சி ஆட்சியின் போது சட்டம் ஒழுங்கு விவகாரங்களில் ஆளுநர் தலையிட்டார். ஆனால் தற்போது மாநிலத்தில் காட்டுமிராண்டித்தனமான ஆட்சி நடைபெற்று வருகிறது. சட்டம் ஒழுங்கு சீர்குலைந்து கொலை போன்ற சம்பவங்கள் அதிகரித்துள்ளது. ஆகையால் ஆளுநர் மாநிலத்தில் குற்ற சம்பவங்களை குறைக்க போதிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.

இவ்வாறு அகிலேஷ் யாதவ் கூறினார்.

உத்திரபிரதேச மாநிலம் ஆக்ராவில் உள்ள உரிமையியல் நீதி மன்ற வளாகத்தில் கடந்த புதன்கிழமை (ஜூன் 12) வழக்கறிஞர்கள் பார் கவுன்சில் சங்க தலைவரான தர்வேஷ் யாதவ் என்ற பெண் சக வழக்கறிஞரால் துப்பாக்கியால் சுட்டு கொல்லப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.        
Tags:    

Similar News