செய்திகள்

நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணிக்க சந்திரசேகர் ராவ் முடிவு

Published On 2019-06-15 06:19 GMT   |   Update On 2019-06-15 06:19 GMT
டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார்.
புதுடெல்லி:

நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. 2-வது முறையாக மகத்தான வெற்றியை பெற்று, தனிப்பெரும்பான்மையுடன் மத்தியில் ஆட்சி அமைத்துள்ளது.

இந்நிலையில், புதிய அரசு பதவியேற்ற பின்னர் முதல் முறையாக நிதி ஆயோக் கூட்டம் டெல்லியில் இன்று நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தில் கலந்துகொள்ள அனைத்து மாநில முதல்-மந்திரிகளுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.



இதில் பங்கேற்க தமிழக முதல்வர் எடப்பாடி பழனிசாமி, ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி உள்பட பல்வேறு மாநில முதல் மந்திரிகளும் டெல்லி சென்றுள்ளனர். இந்தக்கூட்டத்தில் வறட்சி நிவாரணம் உள்பட பல்வேறு முக்கிய விஷயங்களை எழுப்ப அவர்கள் திட்டமிட்டுள்ளனர். 

இந்நிலையில், தலைநகர் டெல்லியில் நடைபெறவுள்ள நிதி ஆயோக் கூட்டத்தை தெலுங்கானா முதல் மந்திரி சந்திரசேகர் ராவ் புறக்கணிக்க முடிவு செய்துள்ளார். அதற்கான காரணத்தை தெரிவிக்கவில்லை.

ஏற்கனவே, மாநில அரசுகளின்  திட்ட செலவினங்களுக்கு நிதி அளிக்கும் அதிகாரம் இல்லாத நிதி ஆயோக் கூட்டம் பயனற்றது என்று விமர்சித்த மம்தா பானர்ஜி இந்த கூட்டத்தை புறக்கணிப்பதாக ஏற்கனவே அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது. 
Tags:    

Similar News