செய்திகள்

கேரள முதல்வர், மந்திரிகளின் விருந்தினர் செலவு ரூ.1 கோடி

Published On 2019-06-13 08:28 GMT   |   Update On 2019-06-13 08:28 GMT
கேரள முதல்வர், மந்திரிகள் தங்களை காண வந்த விருந்தினர்களை உபசரிக்க சுமார் 1 கோடி ரூபாய் செலவு செய்துள்ளனர்.
திருவனந்தபுரம்:

கேரளாவில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கூட்டணி ஆட்சி நடந்து வருகிறது. இந்த அரசு பதவி ஏற்று 3 வருடங்கள் ஆகிறது.

முதல்-மந்திரி பினராயி விஜயன் மற்றும் அவரது மந்திரிசபையில் உள்ள மந்திரிகள் 3 ஆண்டுகளில் அவர்களை பார்க்க வரும் விருந்தினர்களை உபசரிக்க செலவு செய்து உள்ள தொகை பற்றி தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் கேள்வி கேட்கப்பட்டது.

அதற்கு கேரள அரசின் பொது நிர்வாக கணக்குத் துறை பதில் அளித்து உள்ளது. அதில் முதல்-மந்திரி மற்றும் மந்திரிகளின் விருந்தினர் செலவு கணக்கு விவரங்கள் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

கடந்த 3 வருடங்களில் கேரள அரசு சார்பில் விருந்தினர் செலவு தொகை ரூ.99 லட்சத்து 66 ஆயிரத்து 665 ஆகும். இதில் அதிகபட்சமாக முதல்-மந்திரி பினராயி விஜயன் ரூ.26 லட்சத்து 56 ஆயிரத்து 083 பணத்தை தன்னை காணவந்த விருந்தினர்களை உபசரிக்க செலவு செய்து உள்ளார்.

அவருக்கு அடுத்தபடியாக விவசாயத்துறை மந்திரி சுனில்குமார் ரூ.6 லட்சத்து 90 ஆயிரத்து 568 செலவழித்து உள்ளார். மீன்வளத்துறை மந்திரி மெர்சிகுட்டியம்மாள் குறைந்தபட்சமாக ரூ.4 லட்சத்து 83 ஆயிரத்து 566 செலவு செய்து உள்ளார்.
Tags:    

Similar News