செய்திகள்

வாக்காளர்களை திசை திருப்பும் முயற்சிகள் நடந்தன - சோனியா காந்தி குற்றச்சாட்டு

Published On 2019-06-13 06:58 GMT   |   Update On 2019-06-13 07:52 GMT
பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை திசை திருப்பும் முயற்சிகள் நடந்ததாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் சோனியா காந்தி குற்றஞ்சாட்டியுள்ளார்.
உத்தர பிரதேசம்:

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் பா.ஜனதா தலைமையிலான கூட்டனி தனிப்பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆட்சியை தக்க வைத்துக்கொண்டது. காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணி 91 இடங்களை மட்டுமே கைப்பற்றியது. ஐக்கிய முற்போக்கு கூட்டணியின் தலைவர் சோனியா காந்தி உத்தரபிரதேச மாநிலம் ரேபரேலி தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

இந்நிலையில் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிக்கும் விதமாக சோனியா காந்தி ரேபரேலி தொகுதிக்கு மூன்று நாள் சுற்று பயணம் மேற்கொண்டார்.

இந்நிலையில் காங்கிரஸ் கட்சி கூட்டத்திற்கும் ஏற்பாடுகள் செய்யப்பட்டு இருந்தது. அதில் பேசிய சோனியா காந்தி கூறியதாவது:-

நடந்து முடிந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்காளர்களை திசை திருப்பும் முயற்சிகள் நடந்துள்ளன. வாக்குப்பதிவு முறையாக நடைபெறவில்லை என்ற எண்ணம் நாட்டில் உள்ள அனைத்து மக்கள் உள்ளத்திலும் வேரூன்றியுள்ளது. கடந்த சில ஆண்டுகளாக இந்திய தேர்தல் நடைமுறை மீது சந்தேகங்கள் எழுந்துள்ளன. இது ஜனநாயகத்தின் மீதான நம்பிக்கையினை கேள்விக்குறியாக்கும் விதமாக உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.
Tags:    

Similar News