செய்திகள்

கூட்டுறவு தேர்தல் வழக்கில் எங்களையும் ஒரு தரப்பாக ஏற்க வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டில் தி.மு.க. மனு

Published On 2018-04-18 03:43 GMT   |   Update On 2018-04-18 03:43 GMT
கூட்டுறவு தேர்தல் வழக்கில் எங்களையும் ஒரு தரப்பாக ஏற்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது.
புதுடெல்லி:

தமிழ்நாட்டில் 18,435 கூட்டுறவு சங்கங்களுக்கு 5 கட்டங்களாக தேர்தல் நடத்த திட்டமிடப்பட்டது. முதல் இருகட்டத் தேர்தல்கள் ஏற்கனவே முடிவடைந்த நிலையில், தேர்தல் நடைமுறைகளில் பாரபட்சம் காட்டப்படுவதாக தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தொடர்ந்த வழக்கை விசாரித்த மதுரை ஐகோர்ட்டு கிளை, தேர்தல் பணிகளை நிறுத்திவைக்கவும், 3, 4 மற்றும் 5-வது கட்ட தேர்தல்களை நடத்த தடை விதித்தும் உத்தரவிட்டது.

இந்த உத்தரவை எதிர்த்து கூட்டுறவு சங்க தேர்தல் ஆணையம் சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்நிலையில், இதுதொடர்பான வழக்கு விசாரணைக்கு வந்தால் தங்களையும் ஒரு தரப்பாக ஏற்றுக்கொண்டு விசாரிக்க வேண்டும் என்று தி.மு.க. எம்.எல்.ஏ. சக்கரபாணி தரப்பில் சுப்ரீம் கோர்ட்டில் கேவியட் மனு தாக்கல் செய்யப்பட்டது. 
Tags:    

Similar News