செய்திகள்

மத்திய அரசுக்கு எதிராக ஆந்திரா முழுவதும் போராட்டம் - பொதுமக்களுக்கு சந்திரபாபு நாயுடு அழைப்பு

Published On 2018-04-07 07:33 GMT   |   Update On 2018-04-07 07:38 GMT
தனிமாநில அந்தஸ்து கோரி மத்திய அரசுக்கு எதிராக ஆந்திரா முழுவதும் போராட்டம் நடத்த பொதுமக்களுக்கு முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு அழைப்பு விடுத்துள்ளார். #APSpecialStatus
குண்டூர்:

ஆந்திராவுக்கு தனி அந்தஸ்து கேட்டு ஆந்திரா முழுவதும் மத்திய அரசுக்கு எதிராக போராட்டம் நடைபெறும் என்று முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தெரிவித்தார்.

குண்டூர் மாவட்டம் வெங்கடபாலம் கிராமத்தில் தெலுங்கு தேசம் கட்சியினர் சைக்கிள் பேரணியை தொடங்கி வைத்து பேசும் போது சந்திரபாபு நாயுடு கூறியதாவது:-

ஆந்திராவுக்கு சிறப்பு அந்தஸ்து கேட்டு பாராளுமன்றத்தில் நம்பிக்கை இல்லா தீர்மானம் கொண்டுவந்தோம். ஆனால் சபை முடங்கியதால் அந்த முயற்சி பலன் அளிக்கவில்லை.

மத்திய அரசு ஆந்திராவை பலவீனப்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டுள்ளது. 1984-ல் என்.டி.ராமராவ் ஆட்சியை கவிழ்க்க முயன்ற இந்திரா காந்திக்கு என்ன நடந்தது என்பதையும், தெலுங்கு பேசும் மக்களின் சக்தியையும் பிரதமர் மோடி நினைத்துப் பார்க்க வேண்டும்.

ஆந்திர மாநில மக்களின் உணர்வுகளுடன் விளையாட வேண்டாம் என்று மோடிக்கு எச்சரிக்கை விடுக்கிறேன். ஒன்றாக இருந்த ஆந்திராவை காங்கிரஸ் பிரித்துவிட்டது. அந்த காங்கிரசை ஆந்திர மக்கள் மறந்துவிட்டார்கள். அதே கதிதான் மோடிக்கு ஏற்படும். ஏதாவது செய்யுங்கள், ஆனால் தெலுங்கு மக்களை பாதிக்கும் எந்தச் செயலையும் செய்யாதீர்கள்.

மத்திய அரசின் போக்கை கண்டித்து ஆந்திரா முழுவதும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.  #APSpecialStatus
Tags:    

Similar News