செய்திகள்

பத்திரிகையாளர் கவுரி கொலை- இந்து யுவசேன பிரமுகர் கைது

Published On 2018-03-03 08:01 GMT   |   Update On 2018-03-03 08:01 GMT
கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக இந்து யுவசேனா பிரமுகர் நவீன் குமார் என்கிற ஹோட்டோ மன்ஜாவை சிறப்பு புலனாய்வு துறையினர் கைது செய்தனர்.
பெங்களூர்:

கர்நாடக மாநிலம் பெங்களூரில் கடந்த செப்டம்பர் 5-ந்தேதி பெண் பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் மர்ம நபர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார்.

‘லங்கேஷ் பத்ரிகே’ என்ற பத்திரிகையின் முதன்மை ஆசிரியரான அவர் பல்வேறு பிரபல ஆங்கில நாளேடுகளில் பணியாற்றி இருந்தார். வகுப்பு வாதம், மதவாதத்துக்கு எதிராக செயல்பட்டவர். இதனால் அவரது கொலை மிகப்பெரிய அதிர்ச்சியை ஏற்படுத்தியது. பா.ஜனதா மீது கடும் விமர்சனம் எழுந்தது.

கவுரி லங்கேஷ் படுகொலை நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதில் குற்றவாளிகள் என சந்தேகிக்கப்படுபவர்களின் மூன்று வரை படங்கள் அக்டோபர் 14-ந்தேதி வெளியிடப்பட்டன.

உண்மையான குற்றவாளி கண்டு பிடிக்கப்படாததால் சிறப்பு புலனாய்வுக்குழு விசாரணைக்கு உத்தரவிடப்பட்டது.

இந்த நிலையில் கன்னட பத்திரிகையாளர் கவுரி லங்கேஷ் கொலை தொடர்பாக இந்து யுவசேனா பிரமுகர் நவீன் குமார் என்கிற ஹோட்டோ மன்ஜாவை சிறப்பு புலனாய்வு துறையினர் கைது செய்தனர். அவர் மாண்டியா மாவட்டம் மதூர் பகுதியை சேர்ந்தவர்.

சிறப்பு புலனாய்வு போலீசார் அவரிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள். #tamilnews
Tags:    

Similar News