செய்திகள்

மாரடைப்பு, சாலை விபத்து மூலம் 30 சதவீதம் எல்லைப் பாதுகாப்பு படையினர் ஆண்டுதோறும் உயிரிழப்பு

Published On 2016-04-25 06:38 IST   |   Update On 2016-04-25 06:38:00 IST
இந்தியாவில் ஆண்டுதோறும் உயிரிழக்கும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களில் 30 சதவீதம் பேர் மாரடைப்பு மற்றும் விபத்துக்கள் மூலம் உயிரிழந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
புதுடெல்லி:

இந்தியாவில் ஆண்டுதோறும் உயிரிழக்கும் எல்லைப் பாதுகாப்பு படை வீரர்களில் 30 சதவீதம் பேர் மாரடைப்பு மற்றும் விபத்துக்கள் மூலம் உயிரிழந்து வருவதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

எல்லைப் பாதுகாப்பு படையின் பொது இயக்குனர் கே.கே.சர்மா தன்னுடைய படை வீரர்களுடன் கடந்த சனிக்கிழமை  சர்வதேச எல்லைப் பகுதியான ஜெய்சல்மரில் உரையாடினார்.

அப்போது ஆரோக்கியமான உடல்நிலையையும் பாதுகாப்பான போக்குவரத்தையும் மேற்கொள்ளுமாறு அறிவுறுத்தினார்.

மேலும், கடந்த ஆண்டில் உயிரிழந்த 400 பாதுகாப்பு படை வீரர்களில் 70 பேர் மாரடைப்பு மூலமாகவும், 50 பேர் சாலை போக்குவரத்து விபத்திலும் உயிரிழந்துள்ளதாக கூறினார்.

எல்லைப் பகுதியில் புதிய தொழில்நுட்பத்தை பயன்படுத்தி ஆதிக்கத்தை செலுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.

Similar News