உள்ளூர் செய்திகள்

நெல்லை அருகே மாடியில் இருந்து தவறி விழுந்து வாலிபர் பலி

Update: 2022-08-15 09:24 GMT
  • நெல்லையை அடுத்த தச்சநல்லூர் மேலக்கரையை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் அழகேசன்(வயது 31)
  • மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்த அழகே சன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார்

நெல்லை:

நெல்லையை அடுத்த தச்சநல்லூர் மேலக்கரையை சேர்ந்தவர் மதியழகன். இவரது மகன் அழகேசன்(வயது 31). இவர் பெயிண்டராக வேலை பார்த்து வருகிறார்.

இவருக்கு திருமணமாகி 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு சுத்தமல்லி அருகே சொக் கட்டான்தோப்பில் கோவில் கொடை விழாவையொட்டி தனது மாமனார் வீட்டுக்கு அழகேசன் குடும்பத்துடன் சென்றுள்ளார்.

நேற்றிரவு அங்குள்ள மொட்டை மாடியில் நின்று பேசிக்கொண்டிருந்த அழகே சன் எதிர்பாராதவிதமாக தவறி கீழே விழுந்தார். இதில் பலத்த காயம் அடைந்த அவரை 108 ஆம்புலன்ஸ் மூலமாக நெல்லை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவி ட்டதாக தெரி வித்தனர். இதுதொடர்பாக சுத்தமல்லி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags:    

Similar News