உள்ளூர் செய்திகள்

சாலைமறியலில் ஈடுபட்ட கிராம மக்கள்.

காலிக்குடங்களுடன் கிராம மக்கள் சாலை மறியல்

Published On 2022-06-30 09:47 GMT   |   Update On 2022-06-30 09:47 GMT
  • மெலட்டூர் அருகே கிராமமக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
  • கடந்த 10 நாட்களுக்கும் மேலாக தண்ணீர் விநியோகம் இல்லாததால் கிராமமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாக தெரிவித்தனர்.

மெலட்டூர்:

தஞ்சை மாவட்டம், அம்மா பேட்டைஒன்றியம், சுரைக்காயூர் வடக்கு த்தெருவாசிகளுக்கு கடந்த 10 நாட்களுக்கும் மேலாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை என தெரியவருகிறது. குடிநீர் வினியோகம் குறித்து கிராம மக்கள் ஊராட்சி செயலாளர், வட்டார வளர்ச்சி அலுவலர் ஆகியோருக்கு தகவல் தெரிவித்தும் கிராம மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்ய நடவடிக்கை எடுக்காததை கண்டித்து மெலட்டூர் அருகே கிராம மக்கள் காலி குடங்களுடன் திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

தகவல் அறிந்த மெலட்டூர் சப்-இன்ஸ்பெக்டர் முத்துகிரு ஷ்ணன், தனிப்பி ரிவு ஏட்டு ராஜ்குமார் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து போராட்ட குழுவினரிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போராட்ட குழுவினர் சுரைக்காயூர் வடக்குத்தெரு பகுதியில் உள்ள குடிநீர் பம்புகள் செயல்படவில்லை எனவும் மின்கம்பிகள் மிகவும் தாழ்வாகவும், உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்து வகையில் தொங்கிய நிலையில் மின்கம்பிகள் உள்ளதால் இப்பகுதியில் அடிக்கடி மின்தடை ஏற்பட்டு குடிநீர் வினியோகம் நடைபெறவில்லை

கடந்த 10 நாட்களுக்கும் மேலாக கிராம மக்களுக்கு தண்ணீர் விநியோகம் செய்யாததால் கிராமமக்கள் மிகவும் சிரமப்பட்டு வருவதாகவும், தண்ணீர் கிடைக்கவும், தொங்கும் மின்கம்பிகளை சீரமைக்க உடன் நடவடிக்கை எடுக்கனும் என தெரிவித்தனர். காவல் துறையினர் கிராம மக்களுக்கு தண்ணீர் கிடைக்க உடன் நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததைதொடர்ந்து சாலை மறியல் போரா ட்டத்தை தற்காலிகமாக கைவிட்டு கிராம மக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். சாலை மறியல் போராட்டம் காரணமாக மெலட்டூர்- திருக்கருகாவூர் சாலையில் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.

Tags:    

Similar News