உள்ளூர் செய்திகள்

வேலூர் வி.ஐ.டி பல்கலைக்கழகத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களுக்கான எழுத்து தேர்வு இன்று நடந்தது. இதனை வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனி விஜயா, போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

7 மையங்களில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு

Update: 2022-06-25 10:50 GMT
  • வேலூர், திருவண்ணாமலையில் நடந்தது
  • சிறப்பு பஸ்கள் இயக்கப்பட்டன

வேலூர்:

தமிழ்நாடு சீருடை பணியாளர் தேர்வாணையம் நடத்தும் நேரடி சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு இன்று காட்பாடி வி.ஐ.டி. பல்கலைக்கழகத்தில் நடந்தது.

வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, கிருஷ்ணகிரி மாவட்டங்க ளை சேர்ந்த 5ஆயிரத்து434 தேர்வாளர்கள் இந்த தேர்வு மையத்தில் தேர்வு எழுதினர்.தேர்வாளர்கள் பதற்றத்தைத் தவிர்க்க காலை 8.30 மணிக்குள் தேர்வு மையத்திற்கு வந்தனர். பல்க லைக்க ழகத்தின் உள்ளே வாகனங்கள் நிறுத்த வசதி செய்யப்ப ட்டிருந்தது.

தேர்வு எழுதுபவர்கள் செல்போன், ஸ்மா ர்ட்வாட்ச், கால்கு லேட்டர், ப்ளூடூத் போன்ற மின்னணு சாதனங்கள் எடுத்து செல்ல அனுமதி இல்லை.

தேர்வு நடக்கும் அறைகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. தேர்வு எழுதும் தேர்வா ளர்களுக்கு பல்கலைக்கழக கேன்டீனில் மதியம் பணம் செலுத்தி உணவு சாப்பிடும் வசதி ஏற்படுத்தப்பட்டது. தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக வேலூர் பழைய பஸ் நிலையத்தில் இருந்து வி.ஐ.டி. பல்கலைக்கழகத்திற்கு சிறப்பு பஸ் இயக்கப்பட்டன.

முன்னதாக வேலூர் சரக டி.ஐ.ஜி ஆனிவிஜயா, வேலூர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜேஷ் கண்ணன் ஆகியோர் தேர்வு நடக்கும் மையத்தை பார்வையிட்டு ஆய்வு செய்தனர். தேர்வு மையத்தில் பலத்த போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

திருவண்ணாமலை மாவட்டத்தில் கம்பன், அருணை, எஸ்.கே.பி, கரண் ஆகிய என்ஜினீயரிங் கல்லூரிகள் மற்றும் சிஷ்யா மெட்ரிக் பள்ளி உள்பட 6 மையங்களில் இன்று சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது.

இதில் 6,044 பேர் தேர்வு எழுதினர். இந்த தேர்வு மையங்களில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. மேலும் கேமராக்கள் மூலம் தேர்வு மையங்கள் கண்காணிக்கப்பட்டன.

Tags:    

Similar News