உள்ளூர் செய்திகள்

வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகம் பாராட்டி பரிசுகளை வழங்கிய காட்சி,

மாணவிகளை பள்ளியின் தாளாளர் எஸ்.ரவீந்திரன், பள்ளி செயலாளர் வி.சி. கருணாகரன், பள்ளியின் பொருளாளர் ஆர். பழனிசாமி, நிர்வாக அறங்காவலர் கே.திருநாவுக்கரசு, அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.ஜெகநாதன், எஸ். சங்கீதா, ஆர்.கே.செல்வகுமார், எஸ்.பழனிசாமி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

அரசு பொதுத்தேர்வில் வெள்ளகோவில் கொங்கு பள்ளி மாணவர்கள் சாதனை

Published On 2022-06-24 11:22 GMT   |   Update On 2022-06-24 11:22 GMT
  • 10,12ம் வகுப்புகளில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.
  • வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளி நிர்வாகம் பாராட்டி பரிசுகளை வழங்கியது.

வெள்ளகோவில் :

நடந்து முடிந்த 12ம் வகுப்பு பொது தேர்வில் வெள்ளகோவில் கொங்கு பள்ளி மாணவி பி. அருணா 600க்கு 588 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதலிடத்தையும், என். சுருதிகா 586 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் இரண்டாம் இடத்தையும், பி.பவ்யாஸ்ரீ 580 மதிப்பெண்கள் பெற்று மூன்றாவது இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர்.

10-ம் வகுப்பு பொதுத்தேர்வில் டி. காவியா 500க்கு483 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் முதல் இடத்தையும், சி. பிருந்தா 482 மதிப்பெண் பெற்று பள்ளியில் இரண்டாம் இடமும், தர்ஷினி 478 மதிப்பெண்கள் பெற்று பள்ளியில் மூன்றாம் இடத்தை பெற்று சாதனை படைத்துள்ளனர். தேர்வு எழுதியதில் 16 மாணவ மாணவிகள் 100 க்கு 100 மதிப்பெண்கள் பெற்றுள்ளனர்.

10, 12ம் வகுப்புகளில் தேர்வு எழுதிய அனைவரும் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர். வெற்றி பெற்ற மாணவ மாணவிகளை பள்ளியின் தாளாளர் எஸ்.ரவீந்திரன், பள்ளி செயலாளர் வி.சி. கருணாகரன், பள்ளியின் பொருளாளர் ஆர். பழனிசாமி, நிர்வாக அறங்காவலர் கே.திருநாவுக்கரசு, அறக்கட்டளை உறுப்பினர் எஸ்.ஜெகநாதன், எஸ். சங்கீதா, ஆர்.கே.செல்வகுமார், எஸ்.பழனிசாமி ஆகியோர் பாராட்டி பரிசுகளை வழங்கினர்.

Tags:    

Similar News